கனடாவில் சட்டவிரோத குடியேற்றமாக விவரிக்கப்படும் விடயத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.
Quebec - நியூயோர்க் எல்லை பகுதியில் இப்போராட்டம் நடைபெற்றது.
இந்த எல்லை பகுதி வழியாக தான் கடந்த ஜனவரியிலிருந்து ஏப்ரல் வரை தஞ்சம் கோருவோர் 7300 பேர் ஒழுங்கற்ற முறையில் Quebec மாகாணம் உள்ளே வந்துள்ளனர்.
இந்நிலையில் திறந்த எல்லைகளுக்கு அழைப்பு விடுத்தும், வலதுசாரி குழுவான ஸ்ட்ரோம் அலையன்ஸின் குடியேற்ற கொள்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தும் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையில் பதாகைகளை வைத்திருந்த நிலையில் கோஷங்களும் எழுப்பினர்.
http://news.lankasri.com/canada/03/179186?ref=home-section
Geen opmerkingen:
Een reactie posten