தமிழ்நாட்டில் பலரையும் கொந்தளிக்க வைத்த சம்பவம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு வெறியாட்டம். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 10 க்கு அதிகமானோர் பலியாகினர்.
இது பெரும் சர்ச்சையாக இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 மூன்று வழக்கறிஞர்களால் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வாதிடப்பட்டது.
அரசு தரப்பு வாதங்களும் எடுத்து வைக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு பின் பதப்படுத்த வேண்டும்.
அந்த பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் மறு ஆய்வு தேவையா இல்லையா என முடிவு செய்யலாம் என கூறியிருக்கிறார்கள்.
இந்த போராட்டத்தில் நடந்த அநீதியை கண்டித்து காலா பட நடிகை சாக்ஷி அகர்வால் தன் வருத்தத்தை தெரிவித்துள்ளார். இதில் அவர் ஏழாம் அறிவு படத்தில் சூர்யா பேசும் முக்கிய டையலாக்கை பதிவிட்டுள்ளார்.
நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரியே முடிவு செய்கிறான் #SterliteProtest #Sterlite #Thoothukudi #SterliteProtestMay22nd2018 pic.twitter.com/iIja628P9Z— Sakshi Agarwal (@ImSakshiAgarwal) May 23, 2018
http://www.cineulagam.com/events/06/154833?ref=rightsidebar-lankasrinews
Geen opmerkingen:
Een reactie posten