அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக பயணம் செய்த 131 இலங்கையர்கள் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
Etra என்ற எண்ணெய் கப்பலின் மூலம் 131 இலங்கையர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பயணித்துள்ளனர்.
இவர்களில் 98 ஆண்கள், 24 பெண்கள் மற்றும் 7 சிறுவர்கள் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.
இவர்களை இந்தோனேஷியா மற்றம் மலேசியாவை சேர்ந்த ஏஜெண்டுகள் அழைத்து சென்றுள்ளனர். இந்த ஏஜெண்டுகளில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியா நோக்கி பயணம் செய்துகொண்டிருக்கையில், மலேசியாவின் தெற்கு கடல்பகுதியில் வைத்து இவர்கள் எண்ணெய் கப்பலில் இருந்து மீன்களை கொண்டு செல்லும் கப்பலுக்கு மாற்றப்பட்டபோது மலேசிய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள மலேசிய அரசாங்கம், மிகப்பெரிய மனிதகடத்தல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டிலிருந்து இந்த மனிதகடத்தல் கூட்டமைப்பு, இலங்கை, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய பாதைகளின் வழியாக செயல்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
http://news.lankasri.com/australia/03/178116?ref=ls_d_special
Geen opmerkingen:
Een reactie posten