சிரியாவைச் சேர்ந்த அகதி ஒருவர் 62 நாட்கள் மலேசியா விமான நிலையத்தில் தங்கி வரும் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சிரியாவைச் சேர்ந்தவர் Hassan al-Kontar. கடந்த 2006-ஆம் ஆண்டு UAE சென்ற இவர் அங்கு மார்க்கெட்டிங் மேனேஜராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது 2011-ஆம் ஆண்டு சிரியாவில் போர் வந்ததால், இவரை அந்நாட்டிற்கு அழைத்ததாக கூறப்படுகிறது.
இவர் அங்கு செல்ல மறுத்ததன் காரணமாக சிரிய தூதரகம் இவருடைய பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுத்துவிட்டதால், தன்னுடைய வேலைக்கான உரிமை மற்றும் வேலையை இழந்துள்ளார்.
பாஸ்போர்ட் புதுப்பிக்காவிட்டாலும், சுமார் 6 ஆண்டுகள் அங்கு சட்டவிரோதமாக தங்கிய அவரை அதிகாரிகள் பிடித்துள்ளனர். அதன் பின் மூன்று மாத வேலை விசா மூலம் மலேசியாவுக்கு அவர் வந்துள்ளார்.
மலேசியாவிற்கு வந்த இவர் மூன்று மாதம் நிறைவடையும் தருவாயில் அங்கிருந்து Ecuador-க்கு செல்ல முயன்றுள்ளார். ஆனால் விமானத்தில் இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து Cambodia-விற்கு சென்றுள்ளார். ஏனெனில் அந்த நாட்டில் அங்கு சென்று கூட விசா பெற்று கொள்ளலாம். அங்கு சென்ற அவருக்கும் விசா கொடுக்க மறுக்கப்பட்டதால், மீண்டும் மலேசியாவிற்கே வந்துள்ளார்.
மலேசியா வந்த இவருக்கு மூன்று மாதங்கள் நிறைவடைந்ததால், தற்போது மலேசியா நாட்டின் உள்ளேவும் செல்ல முடியாமல், வெளிநாட்டிற்கும் செல்ல முடியாமல், சுமார் 62 நாட்கள் மலேசியா Kuala Lumpur சர்வதேச விமானநிலையத்திலே தங்கி வருகிறார்.
இவருக்கு அங்கிருக்கும் ஊழியர்கள் போன்றவர்கள் உதவுவதால், அங்கிருக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு வாழ்ந்து வருகிறார். அதுமட்டுமின்றி அவரிடமிருந்த பணமும் தற்போது இல்லாத காரணத்தினால் மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சுமார் 62 நாட்கள் விமானநிலையத்தில் இருக்கும் என்னை பார்த்து என் தாய் மிகவும் வருத்தப்பட்டதாகவும், தன்னுடைய முடி போன்றவைகள் மிகவும் அதிகமாக இருப்பதாக அவர் கூறியதாகவும், நான் நன்றாகத் தான் இருக்கிறேன் என்று என் தாயிடம் நான் கூறினாலும், அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
என்னால் முடிந்த அளவு கூறினேன், விமான நிலையத்தில் இருக்கும் நான் வெளியில் வரும் போது முகம் முழுவது முடி வளர்ந்து விடும் போல் தெரிகிறது எனவும் கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதால் கனடா மக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து கனடாவிற்குள் நுழைவதற்கு அனுமதி தரும்படி அரசிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
http://news.lankasri.com/othercountries/03/178556?ref=ls_d_special
Geen opmerkingen:
Een reactie posten