இலங்கை போருக்கு பின் அவுஸ்திரேலியா சென்ற குடும்பத்தினர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை உள்நாட்டு போருக்கு பின் இலங்கையைச் சேர்ந்த குடும்பத்தினர் அவுஸ்திரேலியாவின் Queensland பகுதியில் உள்ள Biloela-ல் தங்குவதற்கு முன் விசா வாங்கியுள்ளனர்.
அந்த குடும்பத்தினரின் விசா கடந்த மார்ச் மாதத்தோடு முடிந்துவிட்டதால், பொலிசார் அவர்களை கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் உள்ள பிராந்திய அகதிகள் ஆதரவு குழுக்கள், வரும் செவ்வாய் அன்று Bendigo-வில் உள்ள Hargreaves Mall-ல் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.
அந்த கூட்டத்தில் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கை குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், அந்த குடும்பத்தினருக்கு ஆதரவாக 96,700 பேர் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இது குறித்து RAR Bendigo தலைவர் Chris Cummins கூறுகையில், அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் குடும்பத்திற்கும் மற்றவர்களுக்கும் தங்கள் ஆதரவைக் காட்டுவதே இந்த கூட்டத்தின் நோக்கம் என்று கூறியுள்ளார்.
http://news.lankasri.com/australia/03/177691?ref=ls_d_world
Geen opmerkingen:
Een reactie posten