தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 11 mei 2018

புலிகள் நிராகரித்ததை ஆதரிக்க தயாரில்லை : சி.வி.விக்னேஸ்வரன் இப்படித் தான் செய்ய வேண்டும்


தமிழீழவிடுதலை புலிகளால் நிராகரிக்கப்பட்ட மாகாண சபை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளைஅனுஷ்டிப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
முள்ளிவாய்க்கால்நினைவேந்தல் நிகழ்வுகளின் ஏற்பாடுகள் தொடர்பில் யாழ் பல்கலைகழக மாணவர்கள் ஒன்றியத்திற்கும்வட மாகாண சபைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் தொடர்பில் நடைபெற்ற ஐ.பி.சிதமிழின் விசேட விவாத நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது முன்னணியின் செயலாளர்செல்வராசா கஜேந்திரன் இந்த தகவலை வெளியிட்டார்.
வடமாகாண முதலமைச்சராக அன்றி, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவராக சி.வி.விக்னேஸ்வரன்முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தலைமை தாங்குவார் ஆயின் அதனை ஏற்பதற்கு தாம்தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தவிவாத நிகழ்வில் கலந்துகொண்டு மேலும் கருத்து வெளியிட்ட செல்வராசா கஜேந்திரன்,
ஸ்ரீலங்காஅரசாங்கம், 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் அதன் கீழான மாகாண சபைகளையும் தீர்வாக திணிக்கமுற்பட்டது. அது தமிழ் மக்களுக்கான சாவு மணியாக இருக்கும். அதனை தமிழீழ விடுதலை புலிகள்நிராகரித்து, சுயநிர்ணய உரிமை வேண்டும் என்ற அடிப்படையில் போராடிவந்தார்கள்.
இனத்தைஅழிப்பதன் மூலம் விடுதலை புலிகளை அழிக்க வேண்டும் என்ற நோக்குடன் மேற்கொள்ளப்பட்டதேஇனஅழிப்பு.விடுதலை புலிகளால் நிராகரிக்கப்பட்ட அந்த மாகாண சபை இந்த நினைவுகூரலை செய்வதற்குதகுதி அற்றது என்பதே எமது கருத்து.
எனினும்வட மாகாண சபையிலுள்ள உறுப்பினர்களை நாம் குறைகூற வரவில்லை. வட மாகாண சபை என்ற கட்டமைப்புஅதனை நினைவுகூர முடியாது.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இணைத் தலைவராக இருக்கும் தமிழ் மக்கள் பேரவைமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வட மாகாண சபைக்குள் முடக்க முடியாது.மாகாண சபைக்குஓர் அங்கீகாரம் கொடுப்பது போன்று செயற்பட முடியாது.
வடக்குகிழக்கு மாகாணங்களை தழுவியதாக தமிழ் மக்கள் பேரவை காணப்படுவதால் இனஅழிப்பு நாளை அவர்கள்அனுஷ்டிக்கட்டும்.பேரவையின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கட்டும்.
அதில்எமக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை.மாகாண சபை உறுப்பினர்கள் கூட அதில் பங்குகொள்ளலாம்.அதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை.
துரதிஷ்வசமாகஅந்தப் பொறுப்பை எடுப்பதற்கு தமிழ் மக்கள் பேரவை தவறியுள்ளது.கொள்கையுடன் உறுதியாகஇருக்க கூடிய எங்களைப் போன்ற தரப்புக்கள் இன அழிப்புக்கு துணைபோனவர்களும் இனஅழிப்புநடைபெற்று நடந்துமுடிந்த பின்னர் ஜெனிவாவில் போர்க்குற்ற விசாரணை தொடர்பான பிரச்சினைஎழுந்த பின்னர் இலங்கை அரசாங்கத்தை பாதுகாக்கும் வகையில் சர்வதேச விசாரணை வேண்டாம்.
உள்ளகவிசாரணைகளுக்கு சந்தர்ப்பம் கொடுங்கள் என்ற கூறும் தரப்புக்களும் நினைவேந்தல் என்றபெயரில் கூடிநின்று கும்மாளம் அடிப்பதற்கு நாங்கள் தாயாரில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் யாழ் பல்கலைகழக தரப்பினரும் வட மாகாண சபையும் பிரிந்துநின்றுசெய்வது தொடர்பான விவாத நிகழ்ச்சி பிரித்தானிய நேரப்படி நாளை மாலை 9 மணிக்கு IBC தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.

http://www.ibctamil.com/interviews/80/100386?ref=ls_d_ibc

Geen opmerkingen:

Een reactie posten