தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 11 mei 2018

ஜெனிவாவில் தமிழர் மீது தாக்குதல


பெருமதிப்பிற்கும் பேரன்பிற்குமுரிய தமிழீழ மக்களே,
சுவிஸ் - யெனீவா மாநிலத்தில் செயற்பட்டுவரும் எமது இயக்கத்தின் செயற்பாட்டாளர் காண்டீபன் அவர்கள் மீது தினேஸ் என அழைக்கப்படும் நபர் ஒருவர் தாக்குதல் நடாத்தியுள்ளார்.
தமிழர் இயக்கமானது இலங்கை அரச பயங்கரவாதத்தால் தமிழினத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அத்துடன் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு சார் இனவழிப்பிற்கு சர்வதேச நீதி வேண்டியும், இறைமையுள்ள தமிழீழத்தின் அங்கீகாரம் நோக்கியும் அனைத்துலக ரீதியில் அரசியல், இராசதந்திர மற்றும் மனித உரிமைத் தளங்களில் செயற்பட்டு வருகின்றது.
காண்டீபன் அவர்கள் தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழுவில் அங்கம் வகிப்பதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் அங்கீகாரம் பெற்ற (Ecosoc Status) எமது சகோதர அமைப்பான Thamil Uzhagam - Ecosoc Status த்தின் ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதான பிரதிநிதியாகவும் செயற்பட்டு வருகின்றார். அதைக்கடந்து சுவிஸ் சோசலிச சனனாயகக் கட்சியின் யெனீவா மாநில உறுப்பினராகவும், யெனீவா மாநில நாடகக் கழகம் ஒன்றிலும் சமூகசேவையாற்றி வருகிறார்.

அவரின் பரந்துபட்ட தொடர்புகளின் ஊடாக சுவிஸின் பிரெஞ்சு மொழி பேசும் பல்கலைக்கழகங்களுடன் தொட்புகளை ஏற்படுத்தி மாநிலம் மாநிலமாக பல்கலைக்கழகங்களிற்கு விஜயம் செய்து சுவிஸ் மாணவர்களிற்கு பிரெஞ்சு மொழியில் இலங்கையில் இடம்பெறும் தமிழின அழிப்பு பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றார்.
பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும், சவால்களுக்கு மத்தியிலும் நாம் மெற்கொள்ளும் இப்பணிகளை தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை அரசாலும், அவ் நிகழ்ச்சி நிரலுக்குள் செயற்படும் சில தமிழர்களும், தமிழர் அமைப்புக்களும் பாரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் முதற்கட்டமாக கடந்த ஆண்டு(2017) ஆனி மாதம் காண்டீபன் மீது தான் ஒரு தேசியவாதி எனக் கூறிக் கொள்ளும் ஒருவரால் முதற்தடவை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அச் சமயத்தில் சம்மந்தப்பட்ட நபரிற்கு எமது அமைப்பால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
இச் சம்பவத்திற்கு பின் சென்ற மாதம் (April 2018) 9 ஆம் திகதி குறிப்பிட்ட «தினேஸ்» எனும் நபர் அநாகரிகமான மற்றும் அச்சுறுத்தும் வகையிலும் குறுஞ்செய்திகளை அனுப்பியிருந்தார். அதில் குறிப்பாக «ஆண் உறுப்பை வெட்டுவேன்» என்ற அநாகரிகத்தின் உச்சகட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுளது. ஆதாரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது (1).
இச்சம்பவத்தின் பின் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் «குருபரன்» அவர்களிற்கும் அநாகரிக சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தி குறுஞ்செய்தி அனுப்பி அச்சுறுத்தினார்.ஆதாரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கு விளக்கமளித்து நேர்மையாக பதில் கூற நாம் விளைந்த போது "ஆணிய புடுங்க வேண்டாம்" எனக் கூறி தட்டிக்கழித்ததுடன் எமது அமைப்பை தரக்குறைவாகக் கூறி ஏழனம் செய்தார். ஆதாரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இவற்றை நாம் விமர்சனமாக எடுத்துக் கொண்டு எவ்விதமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்காமல் இது வரை காலமும் தமிழ் மக்களுக்கான எமது செயற்பாட்டை முன்னெடுத்து வந்தோம்.
ஆனால் நேற்றைய தினம் (09.05.2018) எமது இயக்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் மீது குறிப்பிட்ட «தினேஸ்» எனும் நபர் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
இத் தாக்குதலை தமிழர் இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன் தாக்குதலாளி தினேஸ் மீது சுவிஸ் பாதுகாப்புத் துறையூடாக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த மர்ம நபர் யாருடைய வழிகாட்டலில், எந்த நிகழ்ச்சி நிரலில் இயங்கிக் கொண்டு தமிழ் மக்களுக்கான இச் செயற்பாடுகளை வன்முறையூடாக அடக்கி ஒடுக்க முனைகின்றார் எனும் கேள்வியை சுவிஸ் வாழ் தமிழ்பேசும் மக்கள் இச் சம்பவத்தின் பின் கேட்க ஆரம்பித்துள்ளனர்.
«காண்டீபன்» அவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் எமது இயக்கம் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு பின் முதுகெலும்பாக செயற்படும் களச் செயற்பாட்டாளர் என்பதுடன் கடந்த திங்கட்கிழமை (07.05.2018) சுவிஸ் வாட் மாநிலத்தின் பல்கலைக்கழகத்தில் சுவிஸ் மாணவர்களுக்கு தமிழினவழிப்பு பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப் பின்னணியில் இத் தாக்குதல் இடம்பெற்றமை தினேஸ் எனும் நபர் மீது பலத்த சந்தேகங்களை மனித உரிமைத் தளத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
இத் தருணத்தில் எமக்கு உறுதுணையாக இருக்கும் தமிழ் மக்களுக்கு எமது அன்புகலந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
- தமிழர் இயக்கம்

http://news.lankasri.com/swiss/03/178509?ref=ls_d_swiss

Geen opmerkingen:

Een reactie posten