தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 januari 2017

அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு தடையா? ட்ரம்பின் உத்தரவுக்கு பெண் நீதிபதி கொடுத்த முதல் அடி

ஏழு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு தடை விதித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவுக்கு ப்ரூக்ளின் நீதிமன்றம் அவசர தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அடுத்த 90 நாட்களுக்கு அமெரிக்கா வருவதற்கு விசா வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நாடுகளில் இருந்து புகலிடம் தேடி யார் வந்தாலும் அனுமதி அளிக்கப்படாது என்றும் ட்ரம்ப் அரசு அறிவித்திருந்தது.
எனினும் முஸ்லிம்களுக்கு எதிரான ட்ரம்பின் இந்த உத்தரவை எதிர்த்து நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளின் பகுதியில் இருக்கும் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆன். எம். டோனல்லி ட்ரம்பின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளார்.
ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற 10 நாட்களுக்குள் அவருக்கு கிடைத்த முதல் அடியாக நீதிமன்றத்தின் தடை உத்தரவு கருதப்படுகிறது.
ஆனால் இது தற்காலிகமான உத்தரவு தான். இதை நிரந்தரமாக்குவது குறித்து நீதிமன்றம் விரைவில் முடிவு செய்ய உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அகதிகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே சுவர் எழுப்பும் திட்டத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
அதற்கு மெக்சிகோ எதிர்ப்பு தெரிவிக்க அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது கூடுதலாக 20 சதவீதம் வரி விதிக்க தீர்மானித்துள்ளார்.
இவ்வாறான காரணங்களுக்காகவும் மேலும் பல காரணங்களை முன்வைத்தும் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து அந்நாட்டு மக்கள் குறிப்பாக பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten