நெதர்லாந்து நாட்டில் Heerlen என்ற பகுதியில் 15 வயது மதிக்கத்தக்க தருக்சன் என்ற ஈழத் தமிழ் சிறுவன் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பள்ளியில் உடன் படிக்கும் மாணவர்கள் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் அவனது படத்தை பதிவேற்றம் செய்து ஆபாசமாக சித்தரித்துள்ள்ளனர்.
இதனால், மிகுந்த மனமுடைந்த தருக்சன் கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்த தினத்திலிருந்து பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளான்.
இந்நிலையில், திடீரென்று, பிரியாவிடை கோரும் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தருக்சன் தனது வாழ்வை முடித்துக் கொண்டுள்ளான்.
சக மாணவர்களின் துன்புறுத்தல்..! நெதர்லாந்தில் ஈழத்து தமிழ் சிறுவன் தற்கொலை
நெதர்லாந்தில் ஈழத்து தமிழ் சிறுவன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 15 வயதான தருக்சன் செல்வம் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குறித்த சிறுவன் கல்வி கற்ற பாடசாலையின் சக மாணவர்களின் துன்புறுத்தல் காரணமாக இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தற்கொலை செய்துகொண்ட குறித்த நபரின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் (instagram) பதிவிட்டு மோசமாக எழுதியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த நபர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தருக்சன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/special/01/131389
Geen opmerkingen:
Een reactie posten