இந்நிலையில், கொடூர யுத்தத்தின் பிடியில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் பலரும் வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.
குறிப்பாக இந்தியாவின் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழ்கள் அகதிகளாக தஞ்சமடைந்தனர். எனினும், யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் பலரும் தாயகம் திரும்புகின்றனர்.
பல எதிர்பார்ப்புகளுடன் அவர்கள் தாயகம் திரும்புகின்றனர். அவ்வாறு தாயகம் திரும்பும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறியுள்ளதா..? என்றால் அது கேள்விக்குறியாகவே இருக்கின்றன.
இது போலவே, பல எதிர்பார்ப்புகளுடன் கடந்த 2012ம் ஆண்டு தாயகம் திரும்பிய தாய் ஒருவருக்கு பேரதிர்ச்சியே காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா தாலிக்குளம் பகுதியை சேர்ந்த தாய் ஒருவரே தாயகம் திரும்பிய நிலையில், பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுத்த காலத்தில் கைவிட்டு சென்ற காணிகள் தாயகம் திரும்பி வந்த போது அபகரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வாழ்வதற்கு கூட ஒரு காணி இல்லாமல் துன்பப்படுவதாக கூறப்படுகின்றது.
வெளிநாடுகளில் அகதிகளாய் வாழ்ந்த தாம் தாயகம் திரும்பிய நிலையிலும் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக அவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தம்மைப் போன்ற பலரும் பல எதிர்பார்ப்புகளுடன் தாயகம் திரும்பும் நிலையில், எங்களது எதிர்காலம் குறித்து இந்த அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten