தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 17 januari 2017

தமிழகம் தனி நாடாகுமா? வேகம் கொண்டு எழுந்த இளைஞர்கள்! புயலாகும் போராட்டங்கள்! - நேரடி ரிப்போர்ட்

தமிழகத்தை கட்டுப்படுத்த நினைத்த மத்திய அரசாங்கத்திற்கு இளைஞர்கள் நல்ல பாடம் புகட்டிவருகின்றனர்.
நீண்ட காலமாகவே தமிழகத்தை தன்னகப்படுத்த நினைத்துக் கொண்டிருக்கின்றது மத்திய ஆளும் வர்க்கம்.
ஆனாலும், மத்திய அரசாங்கத்திற்கு அடிபணியாமல் பாரதிய ஜனதா கட்சியினால் தமிழகத்தில் கால் பதிக்க முடியாமல் போனது.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. முன்னதாக தன்னுடைய இந்துத்துவ கொள்கைகளை தமிழகத்தில் பரப்புவதற்கு மோடி அரசாங்கம் முயற்சி செய்கின்றது என்கிற குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.
இந்நிலையில் தான் தமிழகத்தை 1வீதத்தால் கூட இன்றைய மத்திய அரசாங்கத்தினால் நெருங்க கூட முடியவில்லை.
ஆனால், தமிழக முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதாவின் இறப்பிற்குப் பின்னர் அதிமுகவை பணிய வைக்கும் செயற்பாட்டை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்து கொண்டிருக்கின்றது பாரதிய ஜனதா கட்சி.
இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரியத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பீட்டா என்னும் அமைப்பு ஜல்லிக்கட்டிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கியது.
இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறவில்லை.
இருப்பினும் முன்னாள் இந்தத் தடை உத்தரவை நீக்கக்கோரி இதுவரை காலமும் நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது.
ஆனால், இது குறித்து மத்திய அரசாங்கமோ அன்றி நீதிமன்றமோ கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் தான் மாணவர்களும் இளைஞர்களும் தன்னெழுச்சியாக போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.
சமூக வலைத்தளங்களின் ஊடாக பரவிய செய்திகளை அடுத்து இளைஞர்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட ஆரம்பித்தார்கள்.
இந்த எதிர்ப்பு மெல்ல மெல்ல தமிழகம் எங்கும் பரவியது. இப்பொழுது தமிழகம் முழுவதும் இந்தப் போராட்டம் வீரியம் அடைந்திருக்கிறது.
தமிழர்களின் கலாச்சாரத்தின் மீது விழுந்த அடியாகவே ஜல்லிக்கட்டுக்கான தடையை நோக்கவேண்டியிருக்கிறது.
ஏனெனில், உலகில் எத்தனையோ விளையாட்டுக்களில் மிருகங்கள் வதைக்கப்படும் பொழுது, ஜல்லிக்கட்டில் மட்டும் மிருகங்கள் வதைக்கப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் பீட்டா தெரிவித்திருப்பது வேடிக்கையானது.
ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று பீட்டா ஏன் வலியுறுத்தியது என்றும். அதில் இவர்கள் இன்னமும் பிடிவாதமாக இருக்கிறார்கள் என்பதில் இருக்கும் சர்வதேச அரசியல் குறித்து சமூக வலைத்தளங்களில் அக்குவேறு ஆணிவேறாக இளைஞர்களிடத்தில் விழிப்புணர்வு கருத்துக்கள் பரிமாறப்பட்டிருந்தன.
இதனால் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அத்தனை பேரும் போராட்டத்தில் குதித்தனர்.
வரலாற்றில் தமிழக இளைஞர்கள் இவ்வளவு தூரம் தன்னெழுச்சியாக எழுந்தது இதுவே முதல் முறை என்கிறார்கள் விமர்சகர்கள்.
இப்பொழுதுவரை தமிழகத்தில் இளைஞர்களின் வீரியம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது.
இன்று போராட்டத்தில் குவிந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும், பீட்டாவை தடை செய்ய வேண்டும், தமிழகத்தில் தமிழனின் கலாச்சாரம் காப்பாற்றப்படவேண்டும்.
எமது ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டும். மீறி இவை நடக்காமல் போனால் குடியரசு தினத்தில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடுவோம்.
அன்றைய நாள் நமக்கு துக்கநாளாக இருக்கும். கறுப்பு உடையணிந்து எங்கள் எதிர்ப்பை காட்டுவோம் என்றார்கள். மேலும் இன்னும் சில போராட்டக்காரர்கள், தமிழகத்தை பிரித்து எங்கள் நாடாக கொடு.
எங்களின் கலாச்சாரத்தை அழிக்கும் உங்களோடு நாங்கள் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்று குரல்கொடுத்து வருகின்றார்கள்.
இவ்வாறு போராட்டத்தில் வயது வித்தியாசம் இன்றி அனைவரும் களத்தில் இறங்கியிருப்பது தமிழக அரசியலில் புது உத்வேகத்தை கொடுத்திருக்கிறது.
இளைஞர்கள் அரசியலை இப்பொழுது சரியாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். இது தமிழக அரசியல் வரலாற்றையே மாற்றியிருக்கின்றது என்கிறார்கள் அரசியல் அவதானிகள்.
இதற்கிடையில் நாளைய தினம் கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்லாது தங்கள் எதிர்ப்பினை காட்ட வேண்டும் என்று தற்பொழுது மாணவர்கள் முடிவெடுத்து சமூக வலைத்தளங்களின் மூலமாக பகிர்ந்து வருகின்றார்கள்.
தமிழகத்தை மத்திய மாநில அரசாங்கங்கள் கூட்டாக ஏமாற்றி வருகின்றார்கள். தமிழர்களை அடக்கி இன்பம் காண்கின்றார்கள். எங்கள் பாரம்பரியத்தை அழிக்கின்றார்கள் என்று கோசங்களை எழுப்புகின்றார்கள் மாணவர்கள்.
இந்த நிலையில் இப்பொழுது தமிழகத்தில் சினிமா நட்சத்திரங்கள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க ஆரம்பித்திருக்கும் நிலையில் இப்பொழுது மெல்ல அரசியல் பிரமுகர்களும் தங்கள் ஆதரவை கொடுக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.
இளைஞர்களின் இந்த எழுச்சியை கண்டு பெரியவர்கள் வியப்பில் ஆழ்ந்திருப்பதோடு அவர்கள் தங்கள் ஆதரவை மாணவர்களுக்கு கொடுத்துவருகின்றார்கள்.
தமிழகத்தில் இன்று எழுந்திருக்கும் இந்த எழுச்சி நாளை அரசியல் பிரச்சினைகளுக்கும் கொண்டு செல்லப்படும். தமிழகத்தை தமிழன் ஆட்சி செய்ய வேண்டும். எங்கள் நாடு எங்களுக்கு வேண்டும் என்கின்றார்கள் தமிழ் உணர்வாளர்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம் தமிழகத்தில் இளைஞர்கள் நிச்சயம் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்தே தீருவார்கள்.
தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் ஒன்று தோன்றியிருப்பதாகவே தோன்றுகிறது. இந்த எழுச்சி இத்தோடு நின்றுவிடாமல் மேலும் அரசியல் மாற்றத்திற்கும் வழிவகுக்கட்டும்.
இளைஞர்கள் துணிந்து செயலாற்றட்டும். அவர்களின் போராட்டத்திற்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்போமாக.
வாழ்க தமிழ். வளர்க தமிழர் தேசம். பெருகட்டும் தமிழ் உணர்வு.!

Geen opmerkingen:

Een reactie posten