தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 4 januari 2017

இலங்கை பெண் கனேடிய அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டுள்ளார்!!!

2008ஆம் ஆண்டுடன் இலங்கையை விட்டு அகதியாக கனடாவிற்கு சென்று அங்கேயே இல்லற வாழ்வில் இணைந்துவிட்ட பெண் ஒருவர் தற்போது கனேடிய அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தாயான இவரின் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் நேற்று இங்கைக்கு குடிவரவு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் ராஜினி சுப்பிரமணியம் எனவும் இவரின் கணவர் ராசையா ராஜ் மனோகர் எனவும் தெரியவந்துள்ளது.
இத்தம்பதியினருக்கு என இரு குழந்தைகள். குழந்தைகளையும் கணவரையும் விட்டு குறித்த பெண் நாடுகடத்தப்பட்டிருப்பதால் சம்பந்தப்பட்டவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குழந்தைகளுக்கும், பெண்ணின் கணவருக்கும் கனேடிய குடியுரிமை உள்ளது. கனடாவில் பல தசாப்தங்களுக்கும் மேல் வாழ்ந்து வரும் தமிழ் சமூக மக்களிடையே இது போன்ற விடயங்களில் போதிய விழிப்புணர்வு இன்னமும், இல்லாமல் இருப்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.
தமிழர்களுக்காக குரல் கொடுக்க எத்தனையோ பொதுவான அமைப்புகளும், மனித உரிமை சட்டத்தரணிகளும் இருக்கின்ற போது முன் கூட்டியே இது தொடர்பான ஆலோசனைகளை யாரிடமும் கேட்காமல் இறுதி நேரத்தில் ஒட்டு மொத்த குடும்பமும் அவதிக்கு உள்ளாகியுள்ளது.
அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் நாட்டுக்குத் திரும்பி அனுப்பபபடுவதென்பது கனடாவில் அரிதான கடைப்பிடிக்கப்படும் ஒரு விடயமே.
இருப்பினும் சம்பந்தப்பட்ட இந்தத் தம்பதியினர் இது தொடர்பிலான தகவல்களை ஊடகங்களுக்கும், பொது அமைப்புக்களுக்கும், தமிழ் அகதி மக்களின் விடயத்தில் உதவி புரியத் தயாராக இருக்கும் சட்டத்தரணிகளுக்கும் முன்னரே தெரியப்படுத்தியிருந்தால் நிச்சயமாக விடயம் பெரிதுபடுத்தப்பட்டிருப்பதுடன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடனும், பிரதமர் அலுவலகத்துடனும் பேச ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
modern-feminism
- See more at: http://www.canadamirror.com/canada/77691.html#sthash.Ud5wfqF1.5RzEyng9.dpuf

Geen opmerkingen:

Een reactie posten