தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 16 januari 2017

பலமான கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 88 ஆவது இடத்தில்..

பலமான கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.
இதன்படி, இலங்கை 88 ஆவது இடத்தை பிடித்துள்ளதாக 2017 ஆம் ஆண்டுக்கான கடவுச் சீட்டு சுட்டெண் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 2016 ஆம் ஆண்டிற்கான கடவுச் சீட்டு சுட்டெண் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை 87 ஆவது இடத்தை பெற்றுள்ளது.
இந்த நிலையில், 35 நாடுகளுக்கு விசா பெற்றுக்கொள்ளாமல் பயணிப்பதற்கான வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பட்டியலில் உலகின் பலமான கடவுச் சீட்டாக ஜேர்மன் கடவுச் சீட்டு பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் இடத்தை சுவீடன் மற்றும் சிங்கப்பூர் கடவுச் சீட்டுக்களும் பெற்றுள்ளது.
எவ்வாறாயினும், இந்தியா 77 ஆவது இடத்தை பிடித்துள்ளதாகவும், ஆப்கானிஸ்தான் 94 ஆவது இடத்தை அதாவது இறுதி இடத்தை பிடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten