தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 18 januari 2017

லண்டனில் இருந்து இலங்கை! இலங்கையிலிருந்து இந்தியா! கைதாகிய இளைஞனின் பின்னணி?


இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு சென்ற இலங்கையரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
இராமேஸ்வரம் தனுஸ்கோடி அரிசிசல்முனை கடல்பகுதிக்கு வந்து இறங்கிய நபரை கைது செய்த இந்திய பாதுகாப்புத் துறையினர் விடிய விடிய தீவிர விசாரணைகளை நடத்தி வந்தனர்.
தனுஸ்கோடி அருகே ஒன்றாம் மணல்திட்டில் நபர் ஒருவரை இலங்கை படகு இறக்கிவிட்டுச் சென்றதாக பாதுகாப்புத் துறையினருக்கு நேற்று தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனையடுத்து சுங்கத்துறையினர், கடலோர காவல்படையினர் மற்றும் மத்திய புலனாய்வுத்துறையினர் அங்கு சென்று குறித்த நபரை கைது செய்து தனுஷ்கோடி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வந்தனர்.
குறித்த நபர் வவுனியா பகுதியைச் சேர்ந்த ரோபர்ட் சுமன் (23) என தெரியவந்துள்ளது.
மேலும், இவரின் தாயார் லண்டனில் வசித்துவருவதாகவும், சென்னையில் 12ஆம் வகுப்பு வரை படித்து விட்டு மேற்படிப்பிற்கா குறித்த நபர் லண்டன் சென்றுள்ளார்.
இவர் கடந்த நவம்பர் மாதம் பாஸ்போர்ட் மூலம் இலங்கை சென்றதாகவும், நேற்று பகல் இலங்கை படகில் தனுஷ்கோடி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இவரின் குடும்பம் கோயம்புத்தூரில் வசித்துவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து கடவுச்சீட்டு இன்றி சட்டவிரோதமாக இந்தியா வந்ததாக தனுஷ்கோடி பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் இவரின் பின்னணி குறித்தும் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னார்வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியல் 24 மணி நேரமும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கையிலிருந்து படகில் வந்து இறங்கிய இலங்கை நபர் குறித்து பாதுகாப்பு வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/community/01/132079?ref=right_featured

Geen opmerkingen:

Een reactie posten