தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 16 januari 2017

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்தில் 2000 பேர்...! இலங்கையர்களுக்கு ஆபத்தா..?

பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படும் நிலையில், 2000க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வெளிநாடுகளில் இருந்து பிரித்தானியாவில் குடியேறிய பலர், குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களில் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தாம் செய்த குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்த பின்னரும் பிரித்தானியாவில் தொடர்ந்தும் தங்கி இருப்பதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு பிரித்தானியாவில் தொடர்ந்து தங்கியிருக்கும் நபர்களினால் பொது மக்களுக்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
National Victims Association என்ற அமைப்பின் பேச்சாளர் டேவிட் ஹைன்ஸ் என்பவர் பிரித்தானிய உள்துறை அமைச்சிற்கு இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
இந்நிலையில், இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் தண்டனை பெற்று திரும்பியவுடன் நாடு கடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், குற்றாவாளிகள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகள் காரணமாகவே அவர்கள் நாடு கடத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக குற்றவாளிகளின் உடல் நல பிரச்சினை, தாய் நாட்டில் நிலவும் அசாதாரண நிலை, நாடு கடத்தப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் காணப்படுவதாக கூறப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் பிரிதானியாவின் உள்துறை அமைச்சின் பேச்சாளர் கருத்து தெரிவிக்கையில், பொது மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கம் வகையில் செயற்படும் நபர்கள் உடனடியாக நாடுகடத்தப்படுகின்றனர்.
கடந்த ஆண்டில் மாத்திரம் 5800 பேர் வரையில் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பிரித்தானியாவில் கணிசமான புலம் பெயர் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் அண்மைய நாட்களில் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே, தற்போது பிரித்தானிய உள்ளிட்ட நாடுகளில் குடியுரிமை தொடர்பான சட்டங்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் மற்றும் குற்றவாளிகள் நாடு கடத்தப்படுவது தொடர்பான நடைமுறைகள் எதிர்காலத்தில் இலங்கை தமிழர்களுக்கும் பாதிப்பாக அமைந்துவிடுமா என்பது கேள்விக்குறியே...?

Geen opmerkingen:

Een reactie posten