தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 19 januari 2017

சுவிஸ் குடியுரிமைக்கு புதிய சட்டம் : இலங்கையர்களுக்கு வரும் தலையிடி...?

சுவிஸிற்கு சென்று தங்குவது என்றாலே கடினம், இவ்வாறிருக்க அந்த நாட்டில் குடியுரிமை பெறுதல் என்பது யாருக்கும் அவ்வளவு எளிதாக வழங்கப்படுவதில்லை.
அந்த நாட்டில் பிறந்திருந்தாலும் அவர்களது பெற்றோர்கள் இந்த நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை என்றால், அவருக்கு குடியுரிமை வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒருவரின் தாத்தா, பாட்டி அகதிகளாக சுவிஸ் நாட்டிற்கு வந்திருந்தால் அவர்களின் மூன்றாம் தலைமுறை நபர்கள் வழக்கமான குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவ்வாறு குடியுரிமையை பெற்றுக்கொள்வதற்கு 25 வயதிற்குற்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்கின்றது அந்த சட்டம்.
இந்த குடியுரிமை தொடர்பிலான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அந்த நாட்டு மக்களை தங்களுக்கு ஆதரவுனை தருமாறு சில தரப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆனால் இதற்கு வலதுசாரி கட்சி மட்டும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு மட்டும் மொத்தம் 396,600 வெளிநாட்டவர்கள் சுவிஸில் வசித்து வருகிறார்கள். இதனால் இலங்கை புலம்பெயர் மக்களே பெரிதும் பாதிக்கப்படவுள்ளனர்.
இந்த நிலைமை நடைமுறைக்கு வருமாயின் இலங்கை மற்றும் பிற நாடுகளில் இருந்து சுவிஸிற்கு குடியமர செல்பவர்கள் பெரும் பாதிப்படைவது நிச்சயமே.

Geen opmerkingen:

Een reactie posten