வடக்கு, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாப அணியின் முக்கியஸ்தருமான அ.வரதராஜப்பெருமாளுக்கு இலங்கைக் குடியுரிமை மீளவும் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தேர்தலில் போட்டியிடக் கூடிய வகையில் நேற்று அவருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு அவர், இலங்கைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தபோதும் அது நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே தற்போது வரதராஜப்பெருமாளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின் பின்னர் வந்த இணைந்த வடக்கு, கிழக்கின் முதலாவது முதலமைச்சராக அவர் பதவி வகித்துள்ளார்.
எனினும் 13ஆவது திருத்தத்தை தீர்வாக ஏற்க தமிழீழ விடுதலைப் புலிகள், சுயாட்சி அதிகாரங்களைக் கேட்டனர். அதனால் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து முதலமைச்சர் பதவியைத் துறந்த வரதராஜப்பெருமாள், இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
மேலும், போர் நிறைவந்ததை அடுத்து இந்தியாவிலிருந்து சுற்றுலா நுழைவிசைவில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து சென்ற வரதராஜப்பெருமாளுக்கு நேற்றைய தினம் இலங்கைக் குடியுரிமை மீள வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/statements/01/167410?ref=recommended3
Geen opmerkingen:
Een reactie posten