தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 14 december 2017

பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் வட கொரியா பெண்கள்


வடகொரியாவில் நடக்கும் சர்வாதிகார ஆட்சியால் அங்கிருந்து தப்பித்து வரும் பெண்களை சீனாவும்- தென் கொரியாவும் பயன்படுத்திக்கொண்டு சட்டவிரோதமான வர்த்தக முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சீரழிவு இவற்றில் இருந்து நாம் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வட கொரியா பெண்கள் தென்கொரியாவின் வழியாக சீனாவிற்கு குடிபெயர்கின்றனர்.
ஆனால், சீனாவிலும் பாலின வன்முறைகள் நடக்கும் நிலையில், வடகொரியா பெண்கள் அங்கு சென்றிருப்பது அவர்களுக்கு சிறப்பானதொரு வாழ்க்கையாக அமையவில்லை.

சீனாவின் பல ஆண்டுகளாக இருந்து வந்த ஒரு குழந்தை கொள்கை (தற்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளது), சித்திரவதை, கட்டாய கருக்கலைப்பு ஆகியவைகள் மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக நடைமுறையில் உள்ளன.
பெண்களைவிட இப்போது 33 மில்லியனுக்கும் அதிகமான ஆண்கள் உள்ளனர். வடகொரியாவிற்கு அருகில் அமைந்துள்ள சீன மாகாணங்களில் உள்ள பலர், குறிப்பாக ஏழை விவசாயிகள், மனைவியை விலை கொடுத்து வாங்கும் நிலையில் உள்ளனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலை சீனாவில் இருக்கும் நிலையில், வடகொரியாவில் இருந்து தப்பித்து தென் கொரியாவின் வழியாக சீனாவிற்கு வரும் வடகொரிய பெண்களை அந்நாடு கட்டாய திருமணத்திற்கும், பாலியல் தொழிலுக்கும் பயன்படுத்திக்கொள்கிறது.
சட்டவிரோதமாக சீனாவில் இருப்பதால் கட்டாய திருமணத்திற்கு தள்ளப்படுகிறார்கள், அவர்கள் பிடிபட்டாலோ அல்லது கட்டாயமாக நாடு கடத்தப்பட்டாலோ சிறைச்சாலையில் அடைக்கப்படுவார்கள்.
இதன் காரணத்தினாலேயே, வடகொரியா பெண்கள் வேறு வழியின்றி சீன ஆண்களை திருமணம் செய்துகொள்கின்றனர்.
வடகொரியாவில் மனித உரிமைகள் நிலைமை பற்றி 2014 ஆம் ஆண்டு ஐ.நா ஆணையம் விசாரணை மேற்கொண்டதில், ஒரு கட்டுப்பாடாக, அதாவது கொலை, அடிமைப்படுத்தல், சித்திரவதை, சிறைவாசம், கற்பழிப்பு, கட்டாய கருக்கலைப்பு, மற்றும் பிற பாலியல் வன்முறைகள் இருப்பது தெரியவந்தது.
மேலும், கலப்பின குழந்தை பிறப்பை வடகொரியா ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, சீனாவிற்கு தப்பி செல்லும் பெண்கள் அங்கு கட்டாய திருமணம் செய்து கர்ப்பிணியாக வடகொரிய திரும்பினால் சிறைச்சாலையில் அடைக்கப்படும் அவர்கள் கட்டாய கருக்கலைப்பு செய்வதற்கு வற்புறுத்தப்படுகிறார்கள்.



http://news.lankasri.com/othercountries/03/167464

Geen opmerkingen:

Een reactie posten