தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 27 december 2017

அகதிகளை திருப்பி அனுப்பும் திட்டம்: முதல் பட்டியலில் ஒரு இலட்சம் பேர்!


மியன்மார் - வங்கதேசம் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை வங்கதேசத்திலிருந்து திருப்பி அனுப்புவதற்கான அதிகாரப்பூர்வப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரோஹிங்கியா அகதிகளைக் கொண்ட பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மியன்மாரின் ரக்ஹைன் பகுதியில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இலட்சக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் உயிருக்கு அஞ்சி வங்கதேசத்தில் தஞ்சமடைந்திருந்தனர்.
இவர்களை மியன்மாருக்கே திருப்பி அனுப்புவதற்கான ஒப்பந்தம் மியான்மர் - வங்கதேசம் இடையே கடந்த நவம்பர் மாதம் 23ஆம் திகதி கையெழுத்தானது.
இதைப் பற்றி பேசியுள்ள வங்கதேச உயர் அதிகாரி ஒருவர், “தஞ்சமடைந்த 8 இலட்சத்து 50 ஆயிரம் ரோஹிங்கியா அகதிகளின் பெயர் பட்டியல் ஏற்கனவே எங்களிடம் உள்ளது. முதற்கட்டமாக இடம்பெயர்ந்த ஒரு இலட்சம் ரோஹிங்கியாக்களின் பெயர் பட்டியல் மியன்மாரிடம் கொடுப்போம். மியன்மார் அப்பட்டியலை ஆராய்ந்ததும், அடுத்தப்பட்டியலை நாங்கள் அனுப்புவோம்” எனக் கூறியிருக்கிறார்.
ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்பும் ஒப்பந்தத்தின் படி, 2016க்கு பிறகு வங்கதேசத்திற்குள் தஞ்சமடைந்த ரோஹிங்கியாக்கள் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவார்கள் அல்லது திருப்பி அனுப்பப்படும் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இப்பணி பல்வேறு கட்டங்களாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/diaspora/01/169236?ref=ls_d_tamilwin

Geen opmerkingen:

Een reactie posten