எனது தந்தையான கப்டன் கே.பி. தசநாயக்கவை அநீதியான முறையில் கைதுசெய்து தடுத்துவைத்துள்ளனர். அவர் தொடர்பாக இலங்கை வந்த ஐ.நா. செயற்குழுவிடம் நான் முறைப்பாடு செய்ய வந்தபோதும் எனது முறைப்பாட்டை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
புலி தரப்பாக இருந்தால் ஏற்றுக்கொள்வதாகவும், இராணுவ தரப்பாக இருந்தால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் என்னிடம் தெரிவித்துவிட்டனர் என்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரி கப்டன் கே.பி.தசநாயக்கவின் மகள் மஞ்சரி தசநாயக்க தெரிவித்தார்.
இலங்கை வந்த தன்னிச்சையாக தடுத்வைத்தல் தொடர்பாக ஆராயும் ஐ.நா. செயற்குழு பிரதிநிதிகள் நேற்று கொழும்பு பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப குழு அறையில் இலங்கை
விஜயம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். செய்தியாளர் சந்திப்பு முடிவடைந்ததும் ஊடகவியலாளர்கள் குழு அறையிலிருந்து வெளியே வந்தபோது கடற்படை அதிகாரியின் மகள் மஞ்சரி தசநாயக்க அங்கே நின்றுகொண்டிருந்தார்.
இதன்போது அவர் மேலும் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில்,
ஒவ்வொரு முறையும் ஐ.நா. பிரதிநிதிகள் வரும்போது நான் எனது தந்தைக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பில் முறையிடுவதற்கு வருவேன். ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இதற்கு முன்னர் இலங்கை வந்த ஐ.நா. அதிகாரி பென் எமர்சன் எனது தந்தையின் கைது தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக கூறியிருந்தார். என்னுடைய தந்தை குற்றச்சாட்டுக்கள் இன்றி சிறையில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது 5 மாதங்களாக அவர் சிறையில் இருக்கிறார். இந்நிலையில் இலங்கை வந்த ஐ.நா. குழுவினர் புலிகள் இருந்த சிறைக்கூடங்களை சென்று பார்த்தனர். ஆனால் எனது தந்தை தடுத்துவைக்கப்பட்டிருக்கும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்லவில்லை.
இராணுவ வீரர்களை இவர்கள் சென்று பார்க்கவில்லை. அதுமட்டுமன்றி நான் இவர்களிடம் எனது முறைப்பாட்டை தெரிவிக்கவந்தேன்.
ஆனால் அதனையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கை அதிகாரி ஒருவரை அனுப்பி எனது முறைப்பாட்டை பெற்றுக்கொண்டனர். ஆனால் அது உரிய இடத்திற்கு போகுமா என்று தெரியவில்லை.
என்னிடம் முதலில் வந்து புலி தரப்பா? என்று கேட்டனர். நான் இல்லை இராணுவ தரப்பு என்றேன். உடனே எனது முறைப்பாட்டை ஏற்காமல் சென்றுவிட்டனர் என்றார்.
http://www.jvpnews.com/srilanka/04/153746
புலி தரப்பாக இருந்தால் ஏற்றுக்கொள்வதாகவும், இராணுவ தரப்பாக இருந்தால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் என்னிடம் தெரிவித்துவிட்டனர் என்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரி கப்டன் கே.பி.தசநாயக்கவின் மகள் மஞ்சரி தசநாயக்க தெரிவித்தார்.
இலங்கை வந்த தன்னிச்சையாக தடுத்வைத்தல் தொடர்பாக ஆராயும் ஐ.நா. செயற்குழு பிரதிநிதிகள் நேற்று கொழும்பு பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப குழு அறையில் இலங்கை
விஜயம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். செய்தியாளர் சந்திப்பு முடிவடைந்ததும் ஊடகவியலாளர்கள் குழு அறையிலிருந்து வெளியே வந்தபோது கடற்படை அதிகாரியின் மகள் மஞ்சரி தசநாயக்க அங்கே நின்றுகொண்டிருந்தார்.
இதன்போது அவர் மேலும் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில்,
இதற்கு முன்னர் இலங்கை வந்த ஐ.நா. அதிகாரி பென் எமர்சன் எனது தந்தையின் கைது தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக கூறியிருந்தார். என்னுடைய தந்தை குற்றச்சாட்டுக்கள் இன்றி சிறையில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது 5 மாதங்களாக அவர் சிறையில் இருக்கிறார். இந்நிலையில் இலங்கை வந்த ஐ.நா. குழுவினர் புலிகள் இருந்த சிறைக்கூடங்களை சென்று பார்த்தனர். ஆனால் எனது தந்தை தடுத்துவைக்கப்பட்டிருக்கும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்லவில்லை.
இராணுவ வீரர்களை இவர்கள் சென்று பார்க்கவில்லை. அதுமட்டுமன்றி நான் இவர்களிடம் எனது முறைப்பாட்டை தெரிவிக்கவந்தேன்.
ஆனால் அதனையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கை அதிகாரி ஒருவரை அனுப்பி எனது முறைப்பாட்டை பெற்றுக்கொண்டனர். ஆனால் அது உரிய இடத்திற்கு போகுமா என்று தெரியவில்லை.
என்னிடம் முதலில் வந்து புலி தரப்பா? என்று கேட்டனர். நான் இல்லை இராணுவ தரப்பு என்றேன். உடனே எனது முறைப்பாட்டை ஏற்காமல் சென்றுவிட்டனர் என்றார்.
http://www.jvpnews.com/srilanka/04/153746
Geen opmerkingen:
Een reactie posten