தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 14 december 2017

இலங்கையில் பாலியல் ரீதியில் தவறுகள் செய்யும் ஆசிரியர்களுக்கு ஆண்மை நீக்கம்!

பாலி­யல் தவறு செய்­யும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு ஆண்மை நீக்க செய்­ய­ வேண்­டும் என்று சபை­யில் நேற்­றுக் கொந்­த­ளித்­தார் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம்.
விடு­த­லைப் புலி­கள் இருந்­தி­ருந்­தால் இத்­த­கைய ஆசி­ரி­யர்­க­ளுக்கு உட­ன­டி­யா­கவே சாவுத் தண்­டனை வழங்­கப்­பட்­டு­வி­டும் என்று சக உறுப்­பி­னர் புவ­னேஸ்­வ­ர­னும் அதனை ஆமோ­தித்­தார்.
வடக்கு மாகாண சபை­யின் வர­வு­செ­ல­வுத் திட்­டம் மீதான விவா­தம் நேற்று இடம்­பெற்­ற­போது, மாணவ, மாண­வி­க­ளைக் குறிப்­பிட்ட சில ஆசி­ரி­யர்­கள் பாலி­யல் ரீதி­யில் துன்­பு­றுத்­து­வது குறித்­துப் பேசப்­பட்­டது. அதன்­போதே இந்­தக் கருத்­துக்­கள் முன்­வைக்­கப் பட்­டன.
உறுப்­பி­னர் புவ­னேஸ்­வ­ரன் இது தொடர்­பில் கருத்­து­ரைக்­கை­யில் தெரி­வித்­த­தா­வது:
ஆசி­ரி­யர்­க­ளால் மேற்­கொள்­ளப்­ப­டும் பாலி­யல் தவ­று­கள் குற்­றங்­க­ளுக்கு அதி­யுச்ச தண்­டனை வழங்க மாகாண கல்வி அமைச்சு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். வடக்கு மாகா­ணத்­தில் பாட­சாலை ஒன்­றில் கற்­பிக்­கும் ஆசி­ரி­யர் ஒரு­வர் மீது 11 தட­வை­கள் குற்­றச்­சாட்­டுக்­கள் சுமத்­தப்­பட்­ட­போ­தும் அவர் மீது எவ்­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை.
இவ்­வா­றான நிலை­யி­லேயே எமது கல்­விச் சூழல் இருக்­கின்­றது. மாணவ, மாண­வி­க­ளின் பாது­காப்பு இந்த விட­யத்­தில் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும். ஒரு ஆசி­ரி­யர் பாலி­யல் குற்­றச்­சாட்­டுக்கு ஆளா­னால் அவர் மீது தற்­போது எடுக்­கப்­ப­டும் நட­வ­டிக்கை இட­மாற்­றம் மட்­டுமே. ஆனால் இதன் ஊடாக மட்­டும் இந்­தக் குற்­றத்­தைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது.
அவர்­கள் மீது சுயா­தீன விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்­டும். குற்­றம் நிரு­பிக்­கப்­பட்­டால் அவ­ரைப் பத­வி­யி­லி­ருந்து நீக்­க­வேண்­டும். அத்­து­டன் நீதி­மன்ற நட­வ­டிக்­கைக்­கும் அவரை உட்­ப­டுத்த வேண்­டும் என்­றார்.
உறுப்­பி­னர் அரி­ய­ரட்­ணம் தனது உரை­யில்,“நாம் எமது அமைச்­ச­ரையோ செய­ல­ரையோ அதி­கா­ரி­க­ளையோ குறை­கூ­றிக்­கொண்டு இருப்­பது சரி­யல்ல. அவர்­க­ளுக்­குக் கீழ் பணி­யாற்­றும் உத்­தி­யோ­கத்­தர்­க­ளும் நேர்­மை­யா­கச் செயற்­ப­ட­வேண்­டும்.
ஏனெ­னில் அதிக விமர்­ச­னத்­துக்கு ஆளா­கின்­ற­துறை கல்வி. பளை மத்­திய கல்­லூ­ரி­யில் 12 மாண­வர்­க­ளுக்கு ஒரு ஆசி­ரி­யர்­கள் இருக்­கின்­ற­போ­தும் பாட­சா­லைக்கு மதி­யம் 1.30 மணிக்கு சென்­றால் அங்கு ஒரு ஆசி­ரி­யர்­க­ளை­யும் சந்­திக்க முடி­யாது.
இந்த நிலை­யில்­தான் பாட­சாலை காணப்­ப­டு­கின்­றது. சில பாட­சா­லை­க­ளின் அதி­பர்­கள் மாகா­ணக் கல்வி திணைக்­க­ளத்­துக்­குத் தவ­றான தக­வல்­களை வழங்­கு­கின்­ற­னர்” என்­றார்.
“இரா­ணு­வத்­தின் முன்­பள்­ளி­யில் 600க்கும் மேற்­பட்ட முன்­பள்ளி ஆசி­ரி­யர்­கள் பணி­யாற்றி வரு­கின்­ற­னர். அவர்­க­ளும் படை­யி­னர்­தான். இரா­னு­வத்­தின் நடை­மு­றை­யின்­படி போர் ஏற்­பட்­டால் அந்த முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளும் துப்­பாக்கி ஏந்­திப் போருக்­குப் போக­வேண்­டி­ய­வர்­கள்­தான். அவர்­களை நாம் அதி­லி­ருந்து மீட்­டெ­டுக்க ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை” என்று முன்­னாள் கல்வி அமைச்­ச­ரும் தற்­போ­தைய உறுப்­பி­ன­ரு­மான த.குரு­கு­ல­ராஜா தெரி­வித்­தார்.
“பாட­சாலை நேரம் காலை 7.30 ஆக இருப்­ப­தால் மாண­வர்­கள் பலர் துன்­பங்­களை எதிர்­நோக்­கு­கின்­ற­னர். காலை­யில் சாப்­பி­டா­மல் செல்­கின்­ற­னர். இத­னால் பாட­சாலை சென்று சில மனித்­தி­யா­ல­யத்­தி­லேயே சோர்­வ­டை­கின்­ற­னர்.
இத­னால் அவர்­கள் கல்­வி­யில் அக்­கறை செலுத்த முடி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது. ஆகவே பாட­சாலை நேரத்தை மாற்­றம் செய்­வது தொடர்­பில் பரீ­சீ­லனை செய்ய வேண்­டும். பெற்­றோ­ருக்கு அடுத்த படி­யாக ஆசி­ரி­யர்­கள்­தான் பிள்­ளை­க­ளுக்கு துணை­யாக இருக்­கின்­ற­னர். ஆனால் சில சம்­ப­வங்­கள் ஊடாக வேலியே பயிரை மேய்­வ­து­போ­லக் காணப்­ப­டு­கின்­றது.
மாண­வி­கள் மீது ஆசி­ரி­யர்­கள் குற்­ற­மி­ழைத்­தால் அவர்­கள் மீது கடு­மை­யான சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்” என்று மாகா­ண­சபை அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் தெரி­வித்­தார்.

http://www.jvpnews.com/srilanka/04/153485

Geen opmerkingen:

Een reactie posten