தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 22 december 2017

காதலிக்க மறுத்த பெண்ணிற்கு பொதுமக்கள் முன்னிலையில் இளைஞனின் கொடூர செயல்

காட்சி ஊடகமான சினிமா பிற்காலத்தில் மக்களிடத்தில் உளவியல் ரீதியாக பல்வேறு மாற்றங்களை உண்டு செய்யும் என்பது பிரபல நடிகர் சார்லி சாப்ளினின் பொன்மொழிகளில் ஒன்று.
அந்த வகையான மாற்றத்தில் ஒன்று தான் இத்தகைய செயல்களின் அடித்தளமாக கருதப்படுகிறது. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் சிறிய தொழிற்கூடம் ஒன்றில் வரவேற்பாளராக வேலை செய்து வந்த பெண்ணை, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காதலிப்பதாக தினமும் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து தொந்தரவுக்கு ஆளான அப்பெண் இவ்விவகாரம் குறித்து தனது வீட்டில் தெரிவிக்காத நிலையில், காதலை மறுத்த அவரை அந்த நபர் தீயிட்டு கொளுத்தியுள்ளார்.
கேனில் மண்ணெண்ணை எடுத்துக்கொண்டு வந்த அந்த நபர் பொதுமக்கள் முன்னிலையில் பெண்ணை தீயிட்டு கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தற்போது படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ்விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

காதலிக்க மறுக்கும் பெண்ணை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று சினிமாவில் கதாநாயகன் செய்யும் செயல்கள், தற்போதைய தலைமறையினரின் மனதில் வெறித்தனமாக பதிந்து விடுகிறது.
திரையில் தன்னை வெறுக்கும் கதாநாயகியின் மனதை ஒருகட்டத்தில் கதாநாயகன் வென்று வெற்றிக்காண்பது போல நாமும் ஒருநாள் காதலில் வெல்வோம் என்ற நம்பிக்கையில் திரியும் இளைஞர்களுக்கு பெரும்பாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
இந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் தான் இத்தகையான கொலைகளும், தாக்குதல்களும் தொடர்ந்து வருவதாக மனநல மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.


http://www.tamilwin.com/india/04/154458?ref=ls_ta_d

1 opmerking: