தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 4 december 2017

கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை தமிழ் குடும்பத்தை காப்பாற்ற நடந்த இறுதிக்கட்ட முயற்சி


ஐந்து வருடங்களாக அரசியல் அடைக்கலத்துக்காக போராடிய நிலையில் இலங்கையை சேர்ந்த தமிழ் குடும்பம் ஒன்று கனடாவில் தங்கியிருப்பதான இறுதிக்கட்ட முயற்சியில் ஈடுபட்டது.
நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்தநிலையிலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது
ரோபட் லோரன்ஸ் என்பவரும் அவருடைய குடும்பமும் கோரியிருந்த அரசியல் அடைக்கலத்தை கனேடிய அரசாங்கம் நிராகரித்துள்ளது
இந்தநிலையிலேயே அந்தக்குடும்பத்தினர் நேற்று நாடு கடத்தப்படவிருந்தனர்.
கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளராக பணியாற்றிய லோரன்ஸ், தமது மனைவி மூன்று பெண் பிள்ளைகளைக்கொண்ட குடும்பத்தை பாதுகாக்கும் நோக்கில் அமெரிக்காவுக்கு சென்று, அங்கிருந்து 2012ஆம் ஆண்டு கனடாவை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நேற்று நாடு கடத்தப்படவிருந்த இந்த இலங்கைக்குடும்பத்தை காப்பாற்றும் வகையில் அரசியல்வாதிகள், லோரன்ஸின் மகள்மார் கற்கும் பாடசாலை நிர்வாகத்தினர் உட்பட்டவர்கள், கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடன் இறுதிக்கட்ட தொடர்புகளை மேற்கொண்டிருந்தாக கனேடிய செய்தி தெரிவிக்கின்றது.

Geen opmerkingen:

Een reactie posten