சட்டவிரோதமாக ஜேர்மனியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆப்கானிஸ்தானை சேர்ந்த அகதி மீண்டும் நீதிமன்ற உத்தரவின்படி நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஹஸ்மட்டுல்லா பசில்பூர் (23) என்பவர் ஜேர்மனியில் வசித்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் அதிகாரிகளால் பல்கேரியாவுக்கு அனுப்பப்பட்டார், பின்னர் அங்கிருந்து தாய்நாட்டுக்கு பசில்பூர் சென்றார்.
இந்நிலையில் இதுதொடர்பாக ஜேர்மனி நீதிமன்றம் விசாரித்த நிலையில் சட்டவிரோதமாக பசில்பூர், நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டது உறுதியானது.
இதையடுத்து அவரை மீண்டும் நாட்டுக்குள் அனுமதிக்க நீதிமன்றம் உத்தரவிட அதிகாரிகள் உதவியுடன் பசில்யூர் வியாழன் அன்று பிரங்க்பர்ட் நகருக்கு வந்தடைந்தார், இத்தகவலை அகதிகள் உரிமைக் குழு தெரிவித்துள்ளது.
பசில்பூர் மீண்டும் ஜேர்மனிக்கு திரும்பியது நிம்மதியளிப்பதாக குழுவின் உறுப்பினர் ஆண்டிரீஸ் லிண்டர் கூறியுள்ளார்.
ஜேர்மனி அதிகாரிகளை பசில்பூர் தற்போது சந்தித்து பேசியுள்ள நிலையில், விரைவில் அவர் ஏற்கனவே தங்கியிருந்த டுபின்கின் நகருக்கு மாற்றப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
http://news.lankasri.com/germany/03/167540
Geen opmerkingen:
Een reactie posten