ஜேர்மனியில் குற்ற செயல்களில் தொடர்புடைய சிறார் அகதிகளை நாடு கடத்த வேண்டும் என ஜனநாயக கட்சி தலைவர் கிரிஸ்டியன் லிண்ட்னர் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் 15 வயது ஜேர்மன் சிறுமியை 15 வயது ஆப்கானிஸ்தான் அகதி கத்தியால் குத்தி கொலை செய்தான்.
இதையடுத்தே கிரிஸ்டியன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ஆதரவற்ற 18 வயதுக்கு கீழான அகதிகள் குற்றங்கள் செய்தால் அவர்களின் குடும்பத்தினர் இருக்கும் இடம் கண்டுப்பிடிக்கப்பட்டு அகதிகள் நாடுகடத்தப்பட வேண்டும் என கிரிஸ்டியன் வலியுறுத்தியுள்ளார்.
18 வயதுக்கு கீழான அகதிகள் ஜேர்மனிக்குள் நுழைவது சமீபகாலமாக குறைந்துள்ளது.
இந்தாண்டு முதல் பத்து மாதங்களில் 8,107 சிறார்கள் நாட்டுக்குள் வந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது கடந்த 2016-ல் 35,939 ஆகவும், 2015-ல் 22,255 ஆகவும் இருந்ததாக ஜேர்மனியின் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கான மத்திய அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
http://news.lankasri.com/germany/03/168738?ref=ls_d_germany
Geen opmerkingen:
Een reactie posten