தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 18 december 2017

பிரித்தானியாவில் வாழும் இலங்கை, இந்திய மக்களுக்கு எச்சரிக்கை!


பிரித்தானியாவில் லியூசியம் பகுதியை சேர்ந்த பாபர் கான் என்பவருக்கு ஒழுங்குபடுத்தப்படாத குடியேற்ற ஆலோசனை மற்றும் சேவைகளை வழங்கியமைக்காக அண்மையில் 18 மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை Southwark Crown Court விதித்துள்ளது.
மேலும் அவருக்கு 200 மணிநேர பணக்கொடுப்பனவு இன்றிய வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதுடன் எட்டு ஆண்டுகளுக்கு எந்த நிறுவனத்தின் இயக்குனராக இருப்பதற்கும் தகுதியற்றவர் என தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசுக்கு ஏற்பட்ட வழகீட்டு செலவான 500 பவுண்டுகள் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளார்.
இவ் வழக்கினை விசாரணை செய்த Korner QC நீதிபதி "இந்த வழக்கில் கேட்ட சான்றுகள், உங்கள் செயற்பாடுகளின் காலப்பகுதியில் நீங்கள் எந்தவொரு தகுதியும் கொண்டிருக்கவில்லை எனக் காட்டுகிறது.
2012 ம் ஆண்டுக்கு முன்பிருந்து உங்கள் நிறுவனம் வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளீர்கள் என்பது நீங்கள் வேண்டுமென்றே மக்களை ஏமாற்றுவதற்காக செய்யப்பட்ட செயல். பாதிக்கப்படக்கூடிய விண்ணப்பதாரர்களுக்கு இங்கிலாந்தில் இருப்பதற்கான உரிமை என்பது அவர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மிக முக்கியமானதொன்று. எனவே அவர்கள் தகுதி வாய்ந்தவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவது முக்கியம்.
இந்த விண்ணப்பதாரர்களின் அவநம்பிக்கை மற்றும் பாதிப்பு ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்தி கொண்டீர்கள். இது உங்களை நம்பியவர்களை ஏமாற்றும் ஒரு மோசமான குற்றமாகும்” என குறிப்பிட்டு தண்டனை வழங்கியுள்ளார்.
பிரித்தானியாவில் சட்டத் தொழில் துறையில் ஈடுபடுவதற்கும் சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கும் ஏற்ற தகுதிகளை சட்டத்தரணிகளும், குடிவரவு சட்ட ஆலோசகர்களும் கொண்டிருக்க வேண்டும் என்பதுடன் அத்தொழில் ஈடுபடுவதற்காக உரிய நிறுவனங்களிடம் ( Law Society or குடிவரவு சேவைகள் ஆணையாளர் அலுவலகம் The Office of the Immigration Services Commissioner (OISC) அனுமதி பத்திரம் பெற்றிருப்பதோடு சட்டத்தொழில் புரிகின்ற காலப்பகுதியில் முறையான பயிற்சி நெறிகளை ( Training Courses ) பின்பற்றுவதோடு, இழப்பீட்டுக் காப்புறுதியையும் ( Ideminity Insurance) வைத்துக் கொண்டே அத்தொழிலில் ஈடுபட வேண்டும்.
மேலும் ஒரு வாடிக்கையாளரின் வழக்கு முடிந்தவுடன் அவ் வழக்கு தொடர்பான ஆவணங்களின் பிரதிகள் அனைத்தும் 6 வருடங்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவரது சட்டத்தரணி அல்லது குடிவரவு சட்ட ஆலோசகரின் கடமையாகும்.
ஆனால் அவ்வாறான அடிப்படைத் தகுதிகள் மற்றும் உரிய நியதிகளை பின்பற்றாமல் சட்டத்தொழிலில் தமக்கு நிபுணத்துவம் உண்டென்றும் தம்மை சட்டத்தரணிகளாக அல்லது குடிவரவு சட்ட ஆலோசர்களாக காட்டி அச்சேவைக்காக பணம் வசூலிக்கும் மோசடிகள் பல இடங்களில் இடம்பெற்று வருகின்றது.
அவ்வாறான போலி சட்டத்தரணிகள் மற்றும் குடிவரவு சட்ட ஆலோசகர்கள் குறைந்த கட்டணத்தில் சேவைகளை வழங்குவதாலும் அவர்களிடம் ஏமாந்து தமது வதிவிட அனுமதிப் பத்திரங்களை அனுப்புவதற்கு அல்லது வழக்கினை கொண்டு நடத்துவதற்கும் கொடுத்து பலர் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர்.
இதற்கு குறிப்பிட்ட நபரின் பண நெருக்கடி நிலைமை வதிவிட தகமையின்மை என்பனவும் காரணிகளாக அமைகின்றன. அதற்காக தகுதியற்றவர்களிடம் தமது வழக்கினை கொடுத்து ஏமாற்றுபவர்கள் தாமாகவே தமக்கு பிரச்சினைகளை தேடிக்கொள்கின்றார்கள் என்றே கருத வேண்டும்.
இவ்வாறான தகுதியற்ற அல்லது போலியான சட்டத்தரணிகள் மற்றும் குடிவரவு சட்ட ஆலோசகர்களால் நீங்கள் பாதிப்படைந்துள்ளீர்கள் என கருதினால் அல்லது அவர்களை பற்றி தெரிந்தால் பொலிசாருக்கோ அல்லது குடிவரவு சேவைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கோ முறைப்பாடு செய்யலாம்.
தகுதியற்ற சட்டத்தரணிகள் மற்றும் குடிவரவு சட்ட ஆலோசனைகள் தமக்கு ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்கும் பொருட்டும் வாடிக்கையாளரின் ( clients) மற்றும் சமுதாய நலனை கருத்தில் கொண்டும் உரிய முறைகளையும் நியதிகளையும் பின்பற்றி பணி செய்ய வேண்டுமென கேட்கப்படுகின்றார்கள்.
மேலதிக விபரங்களுக்கு

http://www.tamilwin.com/uk/01/168404?ref=recommended2

Geen opmerkingen:

Een reactie posten