தமிழ் தேசிய இனம், தான் வாழுகின்ற ஒரு சூழ்நிலை உருவாக்கப்படாமல் போனால் பொது வாக்கெடுப்பு ஒன்றுக்கு செல்ல அரசாங்கம் தயாரா? என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“அண்மையில் ஸ்பெய்ன் நாட்டில் இருந்து கட்டலோனியாவும், ஈராக்கில் இருந்து குர்திஸ்தானும் பிரிந்து செல்வதற்காக தங்களுக்குள்ளேயே வாக்கெடுப்பு நடத்தியிருந்தது.
இந்நிலையில், தமிழ் தேசிய இனம், தான் வாழுகின்ற ஒரு சூழ்நிலை உருவாக்கப்படாமல் போனால், இவ்வாறான பொது வாக்கெடுப்பு ஒன்றை எதிர்கொள்ள அரசாங்கம் தயாரா?
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வன்னி உள்ளிட்ட பகுதிகளை விடுதலைப் புலிகள் முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது, அவர்கள் நினைத்திருந்தால் இவ்வாறான ஒரு வாக்கெடுப்பை நடத்தியிருக்க முடியும்.
ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. ஏனெனில், இந்த நாட்டில் விட்டுக்கொடுப்புடன் வாழுகின்ற, உலக அங்கீகாரத்துடன் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை எண்ணி அவ்வாறான ஒரு வாக்கெடுப்புக்கு விடுதலைப் புலிகள் முன்போகவில்லை.
1995ஆம் ஆண்டு வரையில் வடக்கின் பல பகுதிகள் விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாடில் இருந்தது. அவர்கள் நினைத்திருந்தால் இவ்வாறான வாக்கெடுப்புக்கு சென்றிருக்க முடியும்.
எனினும், அவர்கள் இதனை செய்யாது, தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள். நல்ல இயதசுத்தியுடன் நடந்திருதார்கள். இதனை அரசாங்கம் சரியாக புரிந்திருக்கவில்லை.
இந்த நாட்டில் மாறி மாறி வந்த தலைவர்கள் அழிவு நடவடிக்கையில் தான் முழு கவனத்தையும் செலுத்தினார்கள். மாறாக நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் எண்ணங்களை கொண்டிருக்கவில்லை.
இந்நிலையில், காணாமல் போனோர் விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி அரசாங்கம் ஒரு தீர்வை தரவேண்டும். அவ்வாறு இல்லாது போனால் இந்த நாடு மீண்டும் ஒரு அபாயகரமான நிலைக்குத்தான் செல்ல முடியும்.
எனவே, அந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/parliment/01/164739?ref=builderfeed
Geen opmerkingen:
Een reactie posten