தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 november 2017

ஏழு ஆண்டு காத்திருந்தும் அரசியல் தலைவருக்கு புகலிடம் கொடுக்க மறுத்த சுவிஸ் !


பாகிஸ்தானிலிருந்து நாடு கடத்தப்பட்ட அந்நாட்டு அரசியல் தலைவர் சுவிஸில் வசித்து வந்த நிலையில் அவருக்கு அரசியல் புகலிடம் மறுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்தவர் பிரஹும்டக் புக்தி (35). இவர் பாகிஸ்தானில் பலோச் ரிப்பபிளிக் கட்சி நடத்தி வந்த நிலையில், கட்சி தடை செய்யப்பட்டதுடன் நாடு கடத்தப்பட்டார்.
முதலில் ஆப்கானிஸ்தானில் வசித்து வந்த புக்தி பின்னர் சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்ந்தார்.
இந்நிலையில் ஏழு ஆண்டுகளாக நிரந்தர அரசியல் புகலிடம் கோரி காத்திருந்த புக்திக்கு அதை வழங்க சுவிஸ் அரசு தற்போது மறுத்துள்ளது.

இதற்கு முன்னர் ஏற்கனவே புகலிடத்துக்கு புக்தி விண்ணப்பித்த போதும் அரசு கொடுக்கவில்லை.
ஏழு ஆண்டுகளுக்கு மேலாக காத்திருந்திருந்தும் தனது அரசியல் புகலிட விண்ணப்பத்தை சுவிஸ் நிராகரித்துள்ளதாக புக்தி டுவிட்டரில் கூறியுள்ளார்.
ஏற்கனவே கடந்தாண்டு செப்டம்பரில் இந்திய அரசிடம் புகலிடம் கேட்டும், இந்தியாவில் தங்கிகொண்டே பாகிஸ்தானுக்கு எதிராக உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய விரும்புவதாக அரசிடம் புக்தி கோரிக்கை வைத்தார்.
ஆனால் அதற்கு இந்திய அரசு மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

 http://news.lankasri.com/swiss/03/137446

Geen opmerkingen:

Een reactie posten