சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 26 தமிழர்கள் புத்தளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவிக்கின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் , மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியொன்றில்அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
http://www.canadamirror.com/srilanka/04/151330?ref=rightsidebar-manithan

Geen opmerkingen:
Een reactie posten