ஆஸ்திரியாவில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வந்த சிறுவன் தனது குடும்பத்தினரின் பசியை போக்குவதற்காக அருகில் உள்ள கடையில் திருடிய பின்னர் தற்கொலை செய்து கொண்டது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Vienna தலைநகரில் உள்ள அகதிகள் முகாமில் 12 வயது சிறுவன் தனது தாய் மற்றும் 6 சகோதரர்களுடன் வசித்து வந்துள்ளான்.
இவனது மூத்த சகோதரன் சின்ட்ரோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதால் தனது குடும்பத்தினை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் இச்சிறுவனுக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் அருகில் உள்ள கடைக்கு சென்ற இச்சிறுவன் அங்கு 6 யூரோ மதிப்பிலான பொருட்களை திருடிக்கொண்டு வந்து தனது குடும்பத்தினரிடம் கொடுத்துள்ளான்.
இருப்பினும், தான் திருடிய காட்சிகள் கமெராவில் பதிவாகியிருந்தால், மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சத்தில் வீட்டிற்கு திரும்பிய இச்சிறுவன் தற்கொலை செய்துகொண்டான்.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இச்சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
http://news.lankasri.com/othercountries/03/137225

Geen opmerkingen:
Een reactie posten