தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 12 november 2017

யாழ். நகரில் மாலை ஏற்பட்ட திடீர் பரபரப்பு!


யாழ்ப்பாணம் சிறைச்சாலைப் பேருந்தில் பயணித்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் வீதியில் நின்ற பொதுமகன் ஒருவரைத் தாக்கியதால் யாழ். நகரில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் யாழ் நகரின் வைத்தியசாலை வீதியில், சத்திரச்சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
வீதியில் மோட்டார் சைக்கிளில் நின்றிருந்த குறித்த இளைஞரை, சிறைச்சாலைப் பேருந்தில் வந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் அதிலிருந்து திடீரென இறங்கி தாக்கியுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர் மதுபோதையிலிருந்தார் என பாதிக்கப்ப்ட்டவர் தரப்பில் கூரப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலை காணப்பட்டது.



http://www.jvpnews.com/srilanka/04/149308

Geen opmerkingen:

Een reactie posten