தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 16 november 2017

சுவிட்சர்லாந்தில் அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து !


இலங்கைக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளன.. அரசியல், பொருளாதாரம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

வெளிவிவகார அமைச்சில் சுவிட்சர்லாந்து பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை சுமூகமாக்கும் நோக்கில் இவ்வாறு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் தெரிய வருவதாவது...

தற்போது செய்யப்பட்டிருக்கும் ஒப்பந்தம் குடியுரிமை பெற்றவர்கள், நிரந்தர வதிவிட உரிமை பெற்றவர்கள் மற்றும் தற்காலிக வதிவிட உரிமை பெற்றவர்களை எந்தவிதத்திலும் பாதிக்கப்போவதில்லை.

அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னர் F அட்டை வழங்கப்பட்ட நிலையில் சுவிட்சர்லாந்தில் தொழில் புரிந்து வருபவர்களையும் பாதிக்கப்போவதில்லை.

5ஆவது வகையை சேர்ந்த அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களையும் அகதி தஞ்ச கோரிக்கைக்கு முடிவு கிடைக்காதவர்களையுமே இந்த ஒப்பந்தம் பாதிக்கும் என கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 600பேர் நாடுகடத்தப்பட உள்ளதாகவும் மிகுதியாக உள்ள 4ஆயிரம் பேர் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் சுவிஸ் குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன...

http://www.jvpnews.com/srilanka/04/149997

Geen opmerkingen:

Een reactie posten