ஜேர்மனியில் அரசியல் நோக்கத்திற்காக மேயர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்தில் உள்ள Altena's நகரில் மேயராக இருப்பவர் Andreas Hollstein(57).
ஜேர்மன் சான்சலரான Angela Merkel-ன் Christian Democratic(CDU) கட்சியை சேர்ந்த Hollstein, தேசிய ஒதுக்கீட்டு வரம்புக்கு அதிகமாக மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா நாட்டின் அகதிகளுக்கு இடம் அளித்து வந்ததாக குற்றம்சுமத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மாலையில் Kebab Shop-ல் வைத்து மேயரை நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.
குத்துவதற்கு முன்பாக நீங்கள் தான் மேயரா? என கேட்டதாகவும், குற்றவாளி போதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளதாகவும், அந்த கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் Armin Laschet(CDU state premier) தெரிவித்துள்ளார்.
மேலும் பன்முகத்தன்மை கொண்ட இந்நாட்டில் வெறுப்புக்கும், வன்முறைக்கும் இடமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தொண்டையில் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் Hollstein, உயிருடன் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
http://news.lankasri.com/germany/03/166245
Geen opmerkingen:
Een reactie posten