தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 14 november 2017

8 வருடங்களின் பின்னர் வெளிநாட்டிலிருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கை குடும்பம்


நியூசிலாந்தின் குயின்ஸ்டவுனில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நவம்பர் மாதம் 21ஆம் திகதி விஜேரத்ன என்பவரும் அவரது மனைவி மற்றும் 3 ஆண் பிள்ளைகள் இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர்.
11, 10 மற்றும் 8 வயதுடைய விஜேரத்ன என்பவரின் பிள்ளைகள் குயின்ஸ்டவுன் முதன்மை பாடசாலையில் கல்வி கற்பதோடு, அவர்கள் சிறந்த மாணவர்களாக கருதப்படுகின்றனர்.

அண்மையில் Otago-Southland பகுதியில் இடம்பெற்ற போட்டி ஒன்றில் இரண்டு பிள்ளைகளும் சாதனை படைத்துள்ளனர்.

அவர்கள் அவுஸ்திரேலிய கல்விப் பரீட்சைகளில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். நீச்சல் மற்றும் கிரிக்கெட் வீரர்களாக உள்ளனர், குயின்ஸ்டவுன் கழகத்தில் விளையாடி வருகின்றனர்.

2010ஆம் ஆண்டு இந்த சிறுவர்களின் தாயார் தினேஷா அமரசிங்க நியூசிலாந்தில் மருத்துவ மாணவியாக பதிவு செய்துள்ளார்.

அவருக்கு 10 ஆண்டு தொழில் அனுபவம் உள்ளதோடு, நியூசிலாந்தின் திறமையான புலம்பெயர்ந்தோர் பிரிவின் கீழ் 2011ஆம் ஆண்டு முதல் ஆக்லாந்தில் சமையல் கலைஞராக பணியாற்றி வருகின்றார்.

2011 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்த குடும்பம் குயின்ஸ்டவுனுக்கு மாற்றப்பட்டது, அங்கு பிரபலமான Lone Star உணவகத்தில் தினேஷா சமையல் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார். அவரது விசாவில் கணவருக்கு திறந்த பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதற்கமைய அவர் New World சுப்பர் மார்க்கெட்டில் பணி புரிந்ததோடு, டெக்ஸி சாரதியாகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

2014ஆம் ஆண்டு தினேஷா தவறி விழுந்தமையினால் அவரது இடுப்பு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது காலில் வலி இருந்த போதிலும், சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்த போதிலும் அவர் தொடர்ந்து பணி செய்து வந்துள்ளார். எனினும் 2015 ஆம் ஆண்டு ACC என வருத்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு மே மாதம் அவரது தனது மூளையை பரிசோதித்து பார்த்த போது அவர் ஸ்களீரோசிஸ் (sclerosis) எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோம்பர் மாதம் தினேஷாவினால் பணி புரிய முடியவில்லை என்பதால், அவரது திறமையான தொழிலாளிக்கான தற்காலிக விசா நிராகரிக்கப்பட்டது. இதனால் அவரது கணவரால் இனி வேலை செய்ய முடியாது என கூறப்பட்டதுடன், அவர்களது குடும்பம் நவம்பர் 21 நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
.
பல்வேறு சட்ட சிக்கல்கள் காரணமாக அவர்கள் 2013ஆம் ஆண்டு விண்ணப்பித்த நிரந்தர விசா தாமதமாகியதாக கூறப்படுகின்றது. எனினும் அவர்களை தொடர்ந்து நியூசிலாந்தில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை அவரது வழக்கறிஞர் மேற்கொண்டு வருவதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.


http://www.tamilwin.com/othercountries/01/165092

Geen opmerkingen:

Een reactie posten