தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 11 november 2017

சுவிஸில் சோகம்: பொலிசாரிடம் இருந்து தப்பிக்க மலையேறி உயிரை விட்ட அகதி !


சுவிட்சர்லாந்து நாட்டில் பொலிசாரிடம் இருந்து தப்பிக்க மலை மீது ஏறியபோது கால் தவறி விழுந்து அகதி ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் Graubunden மாகாணத்தில் உள்ள Valzeina என்ற பகுதியில் தான் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரவு நேரத்தில் பொலிசாருக்கு அவசர தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதில், அகதிகள் முகாம் ஒன்றில் தங்கியுள்ளவர்களை மற்றொரு அகதி கத்தியை காட்டி மிரட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

தகவலை பெற்ற பொலிசார் இரவு சுமார் 9.45 மணியளவில் முகாமிற்கு சென்றுள்ளனர்.

அப்போது, கத்தி வைத்திருந்த நபர் பொலிசாரை நோக்கி ‘அருகில் வந்தால் நான் தற்கொலை செய்துக்கொள்வேன்’ என மிரட்டியுள்ளார்.

‘கத்தியை கீழே போட்டு விடு. அனைத்து உதவிகளையும் செய்கிறோம்’ என பொலிசார் கூறியுள்ளனர்.

பொலிசாரின் வார்த்தைகளை நம்பாத அந்த நபர் முகாமை விட்டு வெளியேறி அருகில் இருந்த குன்றின் மீது ஏறியுள்ளார்.

அப்போது, பொலிசாரும் பின்னால் துரத்தி சென்றுள்ளனர்.

இந்நிலையில், துரதிஷ்டவசமாக கால் இடறியதால் சுமார் 200 அடி பள்ளத்தில் அந்த அகதி விழுந்துள்ளார்.

இச்சம்பவத்திற்கு பின்னர் மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று நபரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த நபர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 20 வயதான வாலிபர் என தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://news.lankasri.com/swiss/03/136532?ref=home-imp-parsely

Geen opmerkingen:

Een reactie posten