தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 november 2017

அகதிகள் அனுபவிக்கும் கொடுமைகள்: வேதனையுடன் விவரித்த ஆசிரியர்


பிரான்ஸின் Calais-ல் தங்கியிருக்கும் அகதிகள் எந்தளவு மனிதநேயம் இல்லாமல் நடத்தப்படுகிறார்கள் என்பதை ஆசிரியர் ஒருவர் விவரித்துள்ளார்.

வடக்கு பிரான்ஸின் Calais-ல் பல்வேறு நாடுகளை சேர்ந்த அதிகளவிலான அகதிகள் தங்கியுள்ளார்கள்.

Care4Calais என்ற அகதிகளுக்கு உதவும் தனியார் நிறுவனம், தேசிய ஆசிரியர்கள் சங்கத்துடன் இணைந்து அங்கு வசிக்கும் அகதிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்தது.

அந்த குழுவில் சைமன் ஷா என்ற ஆசிரியரும் இடம் பெற்றிருந்தார்.
அகதிகளுக்கு நலத்திட்ட உதவிகள் செய்ய சென்ற போது சிறப்பான மற்றும் மோசமான என இரண்டு வித மனிதநேய நிகழ்வுகளை பார்த்ததாக சைமன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ஒரு அகதி சிறுவன் தண்ணீரில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்தான், அவனை காப்பாற்ற அருகிலிருந்த இன்னொரு அகதி சிறுவன் தண்ணீரில் குதித்தான்.

சம்பவம் நடந்த இடத்தின் அருகில் பிரான்ஸ் நாட்டவர்கள் படகிலிருந்து இதை வேடிக்கை பார்த்த போதும் ஒருவர் கூட சிறுவனை காப்பாற்ற முன்வரவில்லை.

இப்படி தான் அகதிகளை இவர் நடத்துகிறார்கள்.

இன்னொரு இடத்தில் அகதிகளுக்கு துணிகள் மற்றும் உணவுகளை கொடுத்து கொண்டிருந்தோம், அங்கு திடீரென வந்த பொலிசார் அகதிகளின் கடவுச்சீட்டுகளை சோதனை செய்தனர்.

பின்னர் அகதிகளின் உடமைகளை பறிமுதல் செய்துவிட்டார்கள்.
நாங்கள் எல்லாரும் அங்கே இருந்ததால் அகதிகளை பொலிசார் ஒன்றும் செய்யவில்லை, இல்லையெனில் கண்ணீர் புகையை அவர்கள் மீது வீசியிருப்பார்கள் என வேதனையுடன் கூறியுள்ளார்.

இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அகதிகள் நம்பிக்கையோடு இருந்து வருவதாகவும் சைமன் கூறியுள்ளார்.

அகதிகள் உரிமைகள் தரவு திட்ட குழு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், பொலிசார் அடித்ததில் பலருக்கு கால் உடைந்ததாகவும், Calais அகதிகள் பலருக்கு உதவாமல் அதிகாரிகள் கைவிட்டதாகவும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

http://news.lankasri.com/france/03/136180

Geen opmerkingen:

Een reactie posten