29 June, 2011
இலங்கையில் நடந்த போரில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இராணுவத்தையும் இலங்கையையும் சர்வதேச விசாரணைக்கு உள்ளாக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக சர்வதேசம் குரல்கொடுத்து வருகின்ற நிலையில், இந்த விசாரணையைத் தாம் தமது சொந்த ஆணைக்குழு மூலம் நடத்தும் ஆற்றல் உள்ளதாக இலங்கை அரசு பதிலளித்து வருகிறது. மனித உரிமைகளை மீறிய நபர்களைக் காப்பாற்றுவதில் பொறுப்பு வகித்துவரும் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் இதையே அண்மையில் ஜெனீவாவில், யு.என்.எச்.சி.ஆர் இல் வைத்துக் கூறியுள்ளார். சனல் 4 விவரணப் படம் வெளியிட்ட பின்னரும் இதையே அரசு ஒப்புவித்து வருகிறது.
இதற்கிடையில் சனல் 4 ஆவணப்படம் ஜெனீவாவில் திரையிடப்பட்ட பின்னர், �இந்த ஆதாரம் சர்வதேச விசாரணையைத் தொடங்கச் செய்யும் என்றால், ஆணைக்குழு தயாராகவும், விசாரணையைத் தொடங்கும் விருப்பத்துடனும் இருக்கிறது� என்று பிரதி வழக்குரைஞர் ஏ.எஹ் நவாஸ் கூறியுள்ளார்.
ஆனால் ஹெய்ட்டியில் அமைதிப் படையாகச் சென்ற இலங்கை இராணுவத்தினர், அங்கு ஏராளமான வயதுகுறைந்த சிறுமிகளைக் கற்பழித்துள்ளார்கள். இவ்வாறு கிட்டத்தட்ட 100 இராணுவத்தினர்மீது ஐ.நா குற்றம் சாட்டிய பின்னரும் அரசாங்கமோ தானே விசாரணை செய்யவுள்ளதாகப் பதிலளித்தது. இப்போது, இவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட சிப்பாய்கள் எங்கே போய்விட்டார்கள்? இந்தச் சிப்பாய்களுக்கு எதிரான விசாரணைகள் தொடங்கப்படும் என்று பாதுகாப்பு விவகாரப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய, இராணுவப் பேச்சாளர் உதய நாயணக்கார ஆகியோரும் கூறுகிறார்களே ஒழிய எதுவித நடவடிக்கையும் இன்றுவரை இல்லை.
இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அரசு, இராணுவ ஒழுங்குமுறை தவறிவிட்டார், மோசடி செய்துவிட்டார் என்றெல்லாம் கூறி சரத் பொன்சேகா மீது மட்டும் வழக்குகளை ஏன் தொடுக்கிறது? ஹெய்ட்டியில் சிறுவர்களைக் கற்பழித்த இராணுவத்தினர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர், அவர்களுக்கு பதவி உயர்வு ஏதும் கிடைத்ததா? இவற்றை எல்லாம் அரசு பொதுமக்களிடமிருந்து மறைக்க விரும்புகிறதா?
இரண்டாம் தடவையும் ஐ.நா செயலாளர் ஆகுவதற்கு இலங்கையில் ஆதரவையும் பெற்றுள்ள பான் கி மூன், இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்தி இவற்றுக்கெல்லாம் விடையைக் கண்டு சொல்லுவாரா ?

Geen opmerkingen:
Een reactie posten