தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 3 juli 2011

சனல் 4 காணொளிக்கு எதிராக அசல் என பாதுகாப்பு அமைச்சினால் வெளியிட்டப்பட்ட வீடியோ

[ சனிக்கிழமை, 02 யூலை 2011, 05:40.26 PM GMT ]

சனல் 4 வெளியிட்ட காணொளியின் தமிழாகத்தினை பாதுகாப்பு அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.
கண்கள் கட்டப்பட்ட நிலையில் போராளிகள் நிர்வாணமாக்கப்பட்டு இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படுகின்ற காட்சிகள் சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப் படத்தில் வெளியாகியிருந்தன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இலங்கை தொடர்பாக பிரிட்டனின் சனல் 4 அலைவரிசை ஒளிபரப்பிய ஆவணப்படுத்திற்கு பயன்படுத்தப்பட்ட, மாற்றமெதுவும் செய்யப்படாத வீடியோ பதிவுகள் கிடைத்துள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது. அத்துடன் குறித்த வீடியோ பிரதிகளை நேற்று ஊடகங்களுக்கும் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.
குறித்த காட்சிகளில் சிங்களத்தில் இராணுவத்தினர் கதைத்த ஒலிகளுக்கு மாற்றீடாக தமிழில் ஒலி ‘டப்பிங்’ செய்யப்பட்டிருக்கின்றது. இருப்பினும் குறித்த காட்சிகளில் இடம்பெறும் குரல்கள் தமிழர்களுக்குச் சொந்தமானவை இல்லை என்பதை அவர்களின் குரல்களே வெளிப்படுத்துவதை அவதானிக்க முடிகிறது.
ஒரு புகைப்படமோ அல்லது காணொளி அது எந்த காலப்பகுதியில் எடுக்கப்பட்டது என்பதை 'மீட்டா டேக்" எனும் தொழில்நுட்பம் மூலம் மிக துல்லியமாக கணித்துக் கொள்ள முடியும். அந்த வகையிலே சனல் 4 ஊடகத்தினால் குறித்த காணொளி ஆராயப்பட்டு ஐ.நாவிடம் கையளித்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


Geen opmerkingen:

Een reactie posten