Friday, October 1, 2010, 14:14
இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் War Without Witness என்கிற கடந்த வருடம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது இலங்கை அரசினால் மனிதப் பேரழிவுகளும், யுத்தக் குற்றங்களும் நடத்தப்பட்டன என்று தீவிரமாகப் பிரசாரம் செய்து செய்து வருகின்றது.
மனிதப் பேரழிவுகள் மற்றும் யுத்தக் குற்றங்கள் ஆகியவற்றுக்கான ஆதாரங்கள் என்று அவ்வப்போது புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றது.
அரச படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டார் என்பதற்கான ஆதாரம் என்று சுமார் நான்கு மாதங்களுக்கு முன் புகைப்படங்கள் சிலவற்றை வெளிப்படுத்தி இருந்தது.
தற்போது அதே இளைஞன் இராணுவத்தினரால் கட்டி வைக்கப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட காணொளி என்று ஒன்றை பிரசுரித்துள்ளது.
காணொளியில் சிங்கள உரையாடல்கள் கேட்கின்றன. உதாரணமாக எத்தனை பேரைக் கொன்றிருக்கின்றாய் ? என்று அவ்விளைஞனிடம் ஒரு கட்டத்தில் வினவப்படுகின்றமையை காணொளியில் கேட்க முடிகின்றது.
Geen opmerkingen:
Een reactie posten