தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 19 juni 2011

பிரதியமைச்சர் முரளிதரன் மீது போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்: அல்ஜெசீரா

Video

[ சனிக்கிழமை, 18 யூன் 2011, 04:07.05 PM GMT ]

பிரதியமைச்சர் முரளிதரன் மீது போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அல்ஜெசீரா தொலைக்காட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நீதிக்கான தமிழர் அமைப்பின் தலைவர் டொனல்ட் உடனான நோ்காணல் மற்றும் சனல்4 காணொளிகள் தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கி ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியொன்றின் போதே அல்ஜெசீரா தொலைக்காட்சி பிரஸ்தாப கோரிக்கையை முன்வைத்துள்ளது.
பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மீது புலிகளுக்காக சிறுவர்களை கட்டாய ஆட்சேர்ப்பு மேற்கொண்டமைக்காக விசாரணை செய்ய வேண்டும் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. ஏற்கெனவே அவர் இலங்கையில் 600 பொலிசாரை கொலை செய்த குற்றச்சாட்டில் பாரிய அழுத்ததை எதிர் நோக்கி வரும் நிலையில் அல்ஜெசீரா இவ்வாறானதோர் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
தற்போது கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆளும் அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியில் உள்ளார் எனவும் அது தெரிவித்துள்ளது.புலிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்ய வேண்டும் என தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அல்ஜசீரா மேலும் தெரிவிக்கின்றது.
புலிகள் இயக்கத்தின் எஞ்சிய முக்கிய பிரமுகர்கள் இன்று ஆளும் மஹிந்த அரசாங்கத்தில் அமைச்சராகவும் முதலமைச்சராகவும் மற்றும் முக்கியஸ்தர்களாகவும் உள்ளனர் என்றும் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி சுட்டிக் காட்டியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten