தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 18 juni 2011

சனல் 4 காணொளியை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்!


சனல் 4 காணொளியை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்! (வீடியோ இணைப்பு)
சனல் 4வினால் “இலங்கையின் படுகொலைக்களம்” என்ற ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டதையடுத்து யுத்தத்தின் போது இடம்பெற்ற கொடூர சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சனல் 4 இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.35 மணியளவில் ஒளிபரப்பியது. இக்காணொளியில் ஈழத்தமிழர்கள் அநீதியான முறையில் இராணுவத்தினரால் கொல்லப்படும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன.

இலங்கை இராணுவத்தினருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் முகமாக உருவாக்கப்பட்ட காணொளியே என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு குறித்த காணொளியை முற்றாக மறுத்துள்ளது.

சனல் 4 ஒளிபரப்பிய காணொளியை பார்த்ததும் தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் Alistair Burt தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் ஏனைய சர்வதேச சமூகங்களுடன் இணைந்து கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 40 தமிழர்களை இலங்கைக்கு திருப்பியனுப்பவென பிரித்தானியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது





15 Jun 2011

Geen opmerkingen:

Een reactie posten