தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 juni 2011

ஐ.நா.வில், பார்வையாளர்களை கண்ணீரில் நனைத்த "இலங்கையின் கொலைக்களம்"! சனல்4 திரைப்படம்

 
[ வெள்ளிக்கிழமை, 03 யூன் 2011, 11:10.15 PM GMT ]
இன்று ஜெனீவாவில் உள்ள ஐ.நாடுகள் மனித உரிமைகள் சபை ஒன்றுகூடலில் காண்பிக்கப்படும் என சனல்4  அறிவித்த "இலங்கையின் கொலைக்களம்" என்னும்  போர்க்குற்ற ஆவணத் திரைப்படம் காண்பிக்கப்பட்டது.
ஈழத்தமிழர்கள் மீதான உண்மைக் கொலைச் சம்பவத்தை திரைப்படமாக்கியது சனல்4 வெளியிட்டுள்ள இத்திரைப்படம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இன்று மிகப் பெரும் பேசு பொருளாகவே இருந்தது.
பார்வையாளர்களின் கண்களில் இருந்து வந்த கண்ணீரும், சில காட்சிகளை பார்க்கமுடியாது கண்களை மூடிக்கொண்டோரையும், தொடர் குண்டுச் சத்தங்களை கேட்கமுடியாமல் தவித்தோரையும் சனல்4 ஊடகம் இன்று வெளியிட்டுள்ளது.
இக்கூட்டத்தொடரில் வெளியான இப்போர்க்குற்ற திரைப்படத்தினை பார்வையிட்ட இலங்கைப் பிரதிநிதியான ஏ.நவாஸ் பார்வையிட்ட போதிலும், தாம் ஏற்கனவே இக்காணொளிகள் தொடர்பாக விசாரணைக்குட்பட்டுவிட்டதாக தட்டுத்தடுமாறி கருத்து தெரிவித்திருப்பினும், சனல்4 செய்தியாளர் ஜொனத்தன் மில்ரர் சந்தித்து உரையாட முற்பட்டவேளை 'தனக்கு ஒரு மீட்டீங்' இருப்பதாக கூறி அங்கிருந்து விரைந்து சென்றது கானக்கூடியதாக இருந்தது.
செல்பேசியில் பதியப்பட்ட, தமிழ் பொது மக்கள் படையினரால் தாக்கப்பட்டுத் துன்புறுத்தப்படும் காட்சியும் இந்த ஆவணப்படத்தில் மிகவும் இலாவகமாக சனல் 04  தொலைக்காட்சியின் செய்தியாளரான ஜோன் ஸ்னோவால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சரணடைந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிகவும் காடைத்தனமான தாக்குதல் காட்சிகள், பொதுமக்கள் தங்கியிருந்த இடங்கள் மீதான கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்கள், பெண் புலி உறுப்பினர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் வன்புணர்வுகளும் அதன் பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்ட காட்சிகளும் சனல் 04 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதால் பார்ப்போரை அழவைத்துள்ளது.
அத்துடன் யுத்தத்தின் இறுதி நேரத்தில் தமிழ்ப்புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழிருந்த பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய காட்சிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சனல் 04 தொலைக்காட்சியானது இதுவரை வெளியிடாத மிகவும் பயங்கரமான தமிழ் மக்கள் மீதான கண்மூடித்தனமான போர் அவலக் காட்சிகளையும் இந்த ஆவணத் திரைப்படம் தாங்கியுள்ளது.
SriLanka;s Killing Fieldsஇலங்கையின் படுகொலைக் களம் என வெளியான இத்திரைப்படம் எதிர்வரும் 14ம் திகதி மக்கள் பார்வைக்காக விடப்படும் என சனல்4 செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Geen opmerkingen:

Een reactie posten