17 June, 2011 by admin
நேற்றைய தினம் லண்டன் கட்விக் விமானநிலையத்தில் இருந்து நாடுகடத்தப்பட்ட சுமார் 40 பேர் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று கட்டநாயக்கா விமானநிலையத்தை வந்தடைந்த இவர்களை, குடிவரவு அதிகாரிகள் இலங்கைக்குள் வர அனுமதித்த பின்னர், சிறப்பு குற்றப் புலணாய்வுப் பிரிவினர் இவர்களை விசாரித்து வருவதாகவும், அவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பு விமானநிலையத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. குறிப்பாக இவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையமாகும்.
தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்பவேண்டாம் என லண்டன் ஹீத்ரோ மற்றும் கட்விக் விமானநிலையங்களில் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக சனல் 4 தொலைக்காட்சி படப்பிடிப்புக் குழுவினரும், அறிவிப்பாளர் ஜோன் ஸ்னோவும் கட்விக் விமானநிலையத்தில் நின்றிருந்தமை பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளுக்கு பெரும் சங்கடங்களை ஏற்படுத்தியிருந்தது. பெரும் எண்ணிக்கையிலான அகதிகள் திருப்பி அனுப்பப்படவிருந்தும், இறுதி நேரத்தில் சிலர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் அவை கைவிடப்பட்டுள்ளதோடு, சனல் 4 தொலைக்காட்சியும் மேலும் உதவிகளைச் செய்துள்ளது.
இன்று கட்டநாயக்கா விமானநிலையம் சென்ற தமிழ் அகதிகளை எப்போது விடுவிப்பார்கள் என்ற கேள்விகளே தற்போது மேலோங்கியுள்ளது எனலாம்.

Geen opmerkingen:
Een reactie posten