[ புதன்கிழமை, 15 யூன் 2011, 06:17.16 PM GMT ]
பிரித்தானியாவின் சனல் 4 ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆவணப் படம் போலியானது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
வேண்டுமென்றே பொதுமக்களை படுகொலை செய்வது போன்ற காட்சிகள் குறித்த ஆவணப்படத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எந்தவிதமான உறுதிப்படுத்தல்களும் இன்றி குறித்த வீடியோ காட்சிகளை சனல்4 ஊடகம் வெளியிட்டுள்ளமை வருத்தமளிப்பதாக லண்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான வீடியோ காட்சிகள் இலங்கை வாழ் பல்லின மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில சர்வதேச ஊடகங்கள் வேண்டுமென்றே ஒரு சிலரைத் திருப்திபடுத்தும் நோக்கில் இவ்வாறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வெளியே வாழும் பிரிவினைவாத சக்திகளின் ஆதரவுடன் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று வெளியான சனல் 4 காணொளி தொடர்பில் ஊடகவியலாளரின் காரசாரமான கேள்விகளுக்கு இலங்கை மனித உரிமைகளின் செயலாளர் ரஜீவ் விஐயசிங்க விழிகள் இரண்டும் பிதுங்க தட்டுத் தடுமாறி பதிலளித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten