05 June, 2011 by admin
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைக் கழக மாநாடு நடைபெற்றது யாவரும் அறிந்ததே. இந் நிகழ்வில் சனல் 4 தொலைக்காட்சி 45 நிமிட ஆவணப்படம் ஒன்றைப் போட்டுக்காட்டியுள்ளது. ஏற்கனவே கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் தமிழ் இளைஞர்களைச் சுடும் காட்சிகளை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி தற்போது புது ஆதாரங்கள் அடங்கிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் குத்துயிரும் குலையுமாக உள்ள பெண்போராளிகளை சிங்கள இராணுவம் மற்றைய இறந்த உடலங்களோடு தூக்கிப் போடுவதும், அப் பெண்களின் அங்கங்கள் குறித்து பாலியல்ரீதியாக தகாத வார்த்தைகளில் கதைப்பதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவில் உள்ள சில காட்சிகளை அதிர்வு இணையம் இங்கே இணைத்திருக்கிறது.
நடைபெற்ற இக் கூட்டத்தில் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளரும் முக்கிய உறுப்பினருமான திரு.சுரேன் சுரேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு சில கேள்விகளை எழுப்பியுள்ளார். மனித உரிமைக் கழகத்தினர், சர்வதேச மன்னிப்புச் சபை உறுப்பினர்கள், பன் நாட்டு பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் இலங்கை அரசின் பிரதிநிதிகள் என மண்டபம் நிறைந்த இக் கூட்டத்தில் லிபியாவை உதாரணம் காட்டி திரு.சுரேன் சுரேந்திரன் அவர்கள் தொடுத்த கேள்விகளால் இலங்கைப் பிரதிநிதி மகிந்த சமரசிங்க திண்டாடியுள்ளார். லிபியாவில் நடந்த போர் குற்றங்களை விசாரிக்கும்படி அந் நாட்டு அதிபருக்கு நீங்கள் பரிந்துரை செய்வீர்களா என மகிந்த சமரசிங்கவை நோக்கி சுரேன் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்க பிரதிநிதிகளும் இக் கூட்டத்தில் இருந்தால் இலங்கைப் பிரதிநிதிகள் இக் கேள்விக்குத் திண்டாடியுள்ளனர். இதனை அடுத்து போர்குற்ற விசாரணைகளை நடத்தும்படி நீங்கள் மகிந்தவிடம் கோரிக்கை விடுப்பீர்களா என்ற கேள்வியும் கேட்க்கப்பட்டுள்ளது.
இங்கே சனல் 4 தொலைக்காட்சியால் காண்பிக்கப்பட்ட போர் குற்ற ஆதார வீடியோக்கள் பலவற்றை உலகத் தமிழர் பேரவையே(GTF) வழங்கியுள்ளதாக அறியப்படுகிறது. பல மாதங்களாக இக் காணொளிகளைச் சேகரித்த உலகத் தமிழர் பேரவையினர், மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் இக் காணொளிகளை இலங்கையில் இருந்து ஐரோப்பாவுக்கு கொண்டுவந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கவிடையமாகும். புலம் பெயர் நாடுகளில் தமிழர்களுக்காக ராஜதந்திர ரீதியில் உயர்மட்டத்தில் பணி புரியும் அமைப்பாக GTF இருப்பதோடு, அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் ஒரு திறமை மிக்க அரசியல்வாதியாவும் உள்ளார். சோணியா காந்தியைச் சந்தித்ததால் தமிழ் மக்களிடையே சில விமர்சனங்கள் எழுந்தபோதும், அவர் அரசியல் நகர்வுகள் தேசியத்தை நோக்கிப் பயணிப்பதை அவதானிக்க முடிகிறதாக ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
நல்லிணக்க ஆணைக்குழு அனைத்தையும் பார்த்துக் கொள்ளும் என்ற விடையம் இலங்கை அரசின் பிரதிநிதியான மகிந்த சமரசிங்கவால் அக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. அதனை எதிர்த்த திரு.சுரேன் சுரேந்திரன் அவர்கள், எத்தனைபேர் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக உண்மைகளை மறைத்துள்ளனர் எனக் கேள்விகேட்டுள்ளார். இலங்கையில் சாட்சி சொல்பவர்களுக்கு பாதுகாப்பு உண்டா எனக் கேள்வி எழுப்பிய சுரேன், சாட்சிகள் சொல்வோரைப் பாதுகாக்க ஒரு அமைப்பாவது உள்ளதா என வினவியுள்ளார். இதேவேளை கே.ரி ராஜசிங்கம் புகைப்படம் பிடிக்க முற்பட்டவேளை அவர் தனது கைகளால் தன் முகத்தை மறைத்துக்கொண்டார் என அதிர்வு இணையம் அறிகிறது.
45 நிமிடமாகக் காண்பிக்கப்பட்ட இக் காணொளிக்கு பின்னர் மகிந்த சமரசிங்கவிடம் கேள்விகள் கேட்கலாம் என்று 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. முதலில் பேசிய அமெரிக்க பிரதிநிதி, இலங்கை அரசை முதலில் பாராட்டிப் பேச ஆரம்பித்து, பின்னர் மிக விரைவாக சாடத் தொடங்கினார். இலங்கை அரசு தன்னை சர்வதேசத்தில் இருந்து அன்னியப்படுத்துவதாக அவர் தெரிவித்தார். சீனா ரஷ்யா பாக்கிஸ்தான் மற்றும் மாலைதீவுப் பிரதிநிதிகள் இலங்கைக்கு ஆதரவாகப் பேசினர். பன் நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொண்ட இம் மாநாட்டில் கேள்விகளைத் தொடுக்க உலகத் தமிழர் பேரவைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
பிரித்தானிய தமிழ் மனித உரிமை ஆர்வலர் திரு டேவிட் ஜோசப் அவர்களும் இக் கூட்டத்தில் கேள்விகளை எழுப்பியிருந்தார். இக் கூட்டத்தில் கலந்துகொண்ட கே.ரி ராஜசிங்கம் நீண்ட நேரமாக உரையாற்றியதோடு, இலங்கை அரசையும் பாராட்டிப் பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

Geen opmerkingen:
Een reactie posten