நெடுங்கேணி மாமடுச்சந்தி, 17ம் கட்டையில் வசித்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்களின் வீட்டுக்குள், திடீரென உட்புகுந்த இராணுவ புலனாய்வாளர்கள் குறித்த நபர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கடந்த மூன்றாம் திகதி மதியம் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர், கைதுக்கான காரணத்தை இராணுவ புலனாய்வாளர்களிடம் கேட்டபோது, தூசன வார்த்தைகளால் ஏசிக்கொண்டே அடிக்கவும் கையோங்கியவாறு, இன்று புதன் கிழமை பதவியாவுக்கு வருமாறு கூறிவிட்டு, தம் பிள்ளைகள் மூவரையும் அவர்கள் அழைத்துச்சென்றதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
பதவியாவுக்கு வருமாறு கூறியவர்கள் அது படைத்தளமா, இராணுவ முகாமா, பொலிஸ் நிலையமா என்று எவ்வித தகவல்களையும் குறிப்பிடவில்லை.
இதனால் அந்த நாள் முழுவதும் பெரும் குழப்பத்தில் பெற்றோர்கள் இருந்த நிலையில், குறித்த மூவரும் சம்பவம் நடந்த இரவே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
http://news.lankasri.com/show-RUmsyCTZMdgv7.html
Geen opmerkingen:
Een reactie posten