தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 6 februari 2014

கச்சதீவு விவகாரத்தில் மத்திய அரசு தெரிவித்த முரணான தகவல்! விளக்கம் கோரி வழக்கு தாக்கல்!!


கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு முன்னுக்கு பின் முரணாக தகவல் வழங்கியமை குறித்து விளக்கம் தரக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கச்சதீவு விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் மத்திய அரசு தனது பதில் மனுவை தாக்கல் செய்தது.
அதில் கச்சதீவு விவகாரம் முடிவடைந்த ஒன்று. தமிழக மீனவர்களுக்கு கச்சதீவில் மீன் பிடிக்க எவ்வித உரிமையும் இல்லை. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் அந்தோனியார் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள மட்டுமே அவர்களுக்கு அனுமதி உண்டு என்று மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது மீனவர் தரப்பு வழக்கறிஞரான பீட்டர் ராயன் தனது வாதத்தை தொடக்கி வைத்து வாதாடினார். அப்போது நீதிமன்றத்தில் மத்திய அரசு தவறான தகவலை தெரிவித்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்த சமயத்தில், நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பிக்கள் கேள்வியெழுப்பிய போது பதிலளித்த மத்திய அமைச்சரான ஸ்வரன் சிங், கச்சதீவில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்கவும், மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்திக்கொள்ளவும் உரிமை உண்டு என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்து அந்த ஒப்பந்தத்தையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
ஆனால் மத்திய அரசோ தற்போது உண்மைக்கு மாறாக இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே நடைபெற்ற கடிதப் போக்குவரத்தை காரணம் காட்டியுள்ளது தவறான தகவல், எனவே நீதிமன்றம் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என பீட்டர் கேட்டுக்கொண்டார்.
பின்னர் நீதிபதிகள் இவ்வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் இன்று பீட்டர் ராயன் தாக்கல் செய்துள்ள மனுவில்,
கச்சதீவில் மீன்பிடி உரிமையில்லை என கடந்த வாரம் மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்திருந்தது. ஆனால், 1974ல் கச்சதீவில் மீன்பிடி உரிமையுள்ளதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார்.
எனவே, மத்திய அரசின் பதில் மனுவை ஏற்கக் கூடாது. கச்சதீவு பகுதியில் மீன்பிடிப்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

http://news.lankasri.com/show-RUmsyCTaMdft3.html

Geen opmerkingen:

Een reactie posten