அமெரிக்காவின் சிரேஸ்ட இராஜதந்திரி ஒருவர் நாட்டுக்குள் பிரவேசிக்க இலங்கை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.
மகளிர் பிரச்சினைகள் தொடர்பிலான அமெரிக்காவின் விசேட தூதுவர் கெதரின் ரொசெல் என்ற இராஜதந்திரிக்கு வீசா மறுக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் 10ம் மற்றும் 11ம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்ய ரொசெல் உத்தேசித்திருந்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்த அமெரிக்க இராஜதந்திரியின் பயணத்திற்கு தடை ஏற்படுத்தப்பட்டமை வருத்தமளிப்பதாக அமெரிக்கத் தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பெண்களை சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக வலுவூட்டி சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்துவதே ரொசெலின் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்க்க்கு செல்ல திட்டமிருந்த ரொசெல் ஓருநாள் கொழும்பிலும் ஒருநாள் வடக்கிலும் பயணங்களை மேற்கொண்டு பேச்சுவாவார்த்தை நடத்தவிருந்தார்.
வீசா மறுக்கப்பட்ட காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்களை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் தொடர்பு கொள்ள ரொசெல் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.lankawin.com/show-RUmsyCTXMdgq1.html
Geen opmerkingen:
Een reactie posten