தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 17 februari 2014

புலிகளுக்கு புனர்வாழ்வளித்திருக்காவிட்டால் 12 ஆயிரம் தோட்டக்களே செலவாகியிருக்கும்!- மகிந்த அமரவீர !!

யுத்தம் முடிவடைந்த பின்னர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்காது போயிருந்தால் வெறும் 12 ஆயிரம் தோட்டக்கள் மட்டுமே செலவாகியிருக்கும் என இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
மாத்தறை பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகளின் 12 ஆயிரம் உறுப்பினர்களை கொலை செய்யாது அவர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
சர்வதேசத்தில் இருந்து இலங்கைக்கு வரும் துரைமாருக்கு இது மறந்து போய்விட்டது. போரில் தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டதாக எம்மில் சிலரே கூறுகின்றனர்.
மக்கள் கொல்லப்படாமல் யுத்தம் ஒன்றில் எப்படி ஈடுபடுவது. போரில் மக்கள் கொல்லப்பட்டாலும் முடிந்தளவில் அப்பாவி மக்களை காப்பாற்றினோம்.
12 ஆயிரம் விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த நேரத்திலேயே கொன்றிருக்க முடியும். 12 ஆயிரம் தோட்டக்கள் மட்டுமே செலவாகியிருக்கும்.
அப்படி செய்திருந்தால் புனர்வாழ்வு பயிற்சிகளை வழங்கும் தேவையிருந்திருக்காது. ஏனைய நாடுகளில் அப்படிதான் செய்தனர். வரிசையாய் நிற்க வைத்து சுட்டுக்கொலை செய்தார்கள். அத்தோடு அந்த கதை முடிந்து விடும்.
அப்படி செய்திருந்தால் அதனை பற்றி மட்டுதான் பேசியிருப்பார்கள். நாம் சரணடைந்தவர்களை அழைத்து வந்து அவர்களும் உண்ணவும் குடிக்கவும் கொடுத்து, புனர்வாழ்வு பயிற்சிகளை வழங்கி, தொழில் தொடங்க பணத்தை வழங்கினோம்.
இந்த நிலையில், வெளிநாட்டு துரைமார் நீங்கள் மனித உரிமைகளை மீறினீர்கள் என்று குற்றம் சுமத்துகின்றனர். இது எவ்வளவு அநீதியான செயல்.
நாட்டு மக்கள் ஜனாதிபதியுடன் இருக்கும் வரையில் அவர்களால் எமது நாட்டுக்கு எதிராக எதனையும் செய்ய முடியாது. சிரியா, லிபியா போன்ற நாடுகளில் நடந்தது போல் ஆர்ப்பாட்டங்களை நடத்தி நாட்டின் தலைவரை வீதிக்கு இழுந்து வந்து கொலை செய்ய வெளிநாடுகள் முயற்சிக்கின்றன.
லிபியா போன்ற நாடுகளில் நடைபெற்ற போது இலங்கையில் மக்களை திரட்டி ஜனாதிபதிக்கு எதிராக கிளர்ச்சியை ஏற்படுத்த முடியாது. இலங்கை மக்கள் அப்படி செய்ய மாட்டார்கள் என்றார்.
http://news.lankasri.com/show-RUmsyCSbLUjo3.html

Geen opmerkingen:

Een reactie posten