எனவே சுரேஷ்குமாருக்கு அந்த வசதியை அன்றைய தினமே செய்து தருவதாக வட்டாட்சியர் உறுதியளித்திருந்தார் . ஆயினும் அதன் படி எதுவித ஒழுங்கும் செய்யப்படவில்லை . இரண்டு நாட்களின் பின்னர் வட்டாட்சியர் மற்றும் Q பிரிவு அதிகாரிகளிடம் அனுமதி பெற்று தனது சொந்த செலவிலேயே மலசல கூட வசதி மற்றும் தங்குமிட வசதிகளை செய்து கொள்வதற்காக எடுத்து வரப்பட்ட பொருட்களை காவலர்கள் அனுமதிக்கவில்லை . அதனைத்தொடர்ந்து வட்டாட்சியரிடம் தொடர்பு கொண்ட போதும் பொருட்களை உள்ளே அனுமதிப்பதற்கான எதுவித நடவடிக்கையும்
மேட்கொள்ளவில்லை . பேசுவதற்கு வட்டாச்சியரை அழைத்த போதும் அவர் அங்கு சமூகமளிக்கவில்லை . அந்த பொருட்களை உள்ளே எடுப்பதற்காக முகாம் வாசிகள் பிரதான கதவினை பூட்டி உள்ளீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . உடனடியாக அங்கு வந்த திருச்சி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பொருட்களை அனுமதிப்பதற்கும் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுச் சென்றார் . அவரின் வாக்குறுதியை அடுத்து உள்ளீர்ப்பு போராட்டம் நிறுத்தப்பட்டது .சம்பவம் நடைபெற்று மறுதினமான 26.02.2014 அன்று போராட்டம் நடத்தியவர்களில் கெங்காதரன் .பகிதரன் ,உதயதாஸ் ,ஈழநேரு ஆகியோரை கைது செய்துள்ளது காவல்துறை .
அதிகாரிகளை கடமை செய்ய விடாமல் தடுத்தமை , அரச அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தமை , சிறப்பு முகாமில் உள்ள நைஜீரிய நாட்டவர்களுக்கு இடையூறாக இருந்தமை போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர் .இதில் பகீதரன் என்பவர் ஏழு வருடங்களாகவும் கங்காதரன் என்பவர் ஐந்து வருடங்களாகவும் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் . கங்காதரன் என்பவர் குற்றவாளி இல்லையென்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் மூன்று மாதங்களாக தடுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . ஒன்றரை வருடங்களாக சிறப்பு முகாம் தடுப்பில் இருக்கும் ஈழ நேரு என்பவரும் வழக்கிலிருந்து விடுதலை பெற்ற நிலையிலேயே மீண்டும் இவ்வாறான பொய்க்குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார் .
உதயதாஸ் என்பவர் ஒரு வருட காலமாக சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் . மாற்றுத்திறனாளியாக உள்ள சுரேஷ்குமார் என்பவரை பராமரிப்பதற்கு ஒருவரின் உதவியை அதிகாரிகளிடம் கோரியும் (சம்பளம் தானே வழங்குவதாக ) ஒரு வருடமாக எதுவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் உதயதாஸ் என்பவரே இதுவரை காலமும் பராமரித்து வந்தார் . அவரும் தற்போது செய்யப்பட்டுள்ளதால் சுரேஷ்குமாரால் தனித்து இயங்கமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளார். இப்படி உடல்நலம் பாதிக்கப்பட்டவரை சிறையில் அடைக்கும்போழுது அவருக்கு தேவையானவற்றை செய்வதற்கு ஒரு உதவியாளரை நியமித்திருக்க வேண்டும் . ஆனால் இவருக்கு அப்படி எந்த தேவையையும் பூர்த்தி செய்யாமல் எந்தவித வசதியும் இல்லாத திருச்சி சிறப்புமுகாமில் அடைத்திருப்பது கண்டனத்திற்குரியது. இங்குள்ளவர்கள் சமைத்தே உண்ண வேண்டும் .
ஆயினும் சமையல் கூட வசதிகள் எதுவும் இல்லை . தங்க வைக்கப்பட்டுள்ள மிகச்சிறிய அறைகளுக்கு முன்னாலேயே சமைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றார்கள் அகதிகள் . திருச்சி சிறப்பு முகாமில் ஒருவர் மட்டும் தங்கக்கூடிய 19 மிகச்சிறிய அறைகள் உள்ளன . 38 அகதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் . அவர்களின் உடமைகளுடன் நிம்மதியாக உறங்குவதற்கு கூட வசதி அற்ற நிலையில் உள்ளனர் . அங்குள்ளவர்களை பார்ப்பதற்கு உறவினர்கள் வந்தால் அமர்ந்திருந்து கதைப்பதற்கு முடியாத சூழல் நிலவுவதால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் .
Geen opmerkingen:
Een reactie posten